உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

(247

திசைமாறிய ஆற்றல்கள் என்னலாம். ஏனெனில் அவை பகைவரை நோக்கிச் சுடுவதற்கு அமைக்கப்பட்ட பீரங்கிகள் போன்றவை யல்ல. தம்மவரையே நோக்கிச் சுடுவதற்கு அமைக்கப்பட்ட பீரங்கிகள் போன்றவை.

உணர்ச்சியாற்றலை இயக்கி அடக்கவல்ல உயர் அறிவாற்றலே ஆக்க ஆற்றல், மனித ஆற்றல், தெய்விக ஆற்றல் அவ்வாற்றல் உயருந்தோரும் அது ஆக்க ஆற்றலாய் மனித ஆற்றலாய், தெய்விக ஆற்றலாய் வளர்ச்சியுறுகிறது.

தளர்ந்து நலிவுற்ற மனிதன், ஆற்றல் படைத்த மனிதன் ஆகிய இருவர்களுக்குமிடையே உள்ள வேறுபாடு துணி வாற்றல் சார்ந்த ஒன்று எனப் பலர் எண்ணக்கூடும். இது உண்மையன்று. ஏனெனில் துணிச்சல் மிக்கவர்கள் மூர்க்கமா யிருக்கலாம். அடம்பிடித்தவர்களாய், பிடிமுரண்டுக்காரரா யிருக்கலாம். உணர்ச்சிவெறியில் துணிகரச் செயலைச் செய்து பின் வருந்துபவர்களாயிருக்கலாம். ஆற்றல் படைத்த மனிதன் என்பவன் துணிவாற்றல் படைத்தவனோ, உணர்ச்சியாற்றல் படைத்தவனோ ஆகான். அறிவாற்றல் படைத்தவன் மட்டுமே.

னனில் ஆற்றலை இயக்கும் ஆற்றல் அறிவே. கண்ணுடை யவன் நடைவழியறிந்து நடக்கும் நடையே உயிர்நடை அதுபோல அறிவுடையவன் ஆற்றலே அறிவுடைய ஆற்றலாக, நோக்குமுடைய ஆற்றலாக, உயிர் ஆற்றலாக இயங்க முடியும். மற்றது குருட்டு மாட்டின் குதிப்பு; குடியன், கோட்டிக்காரன் கும்மாளம்; அவ்வளவே!

உண்மையான ஆற்றலை அடைவதற்கான படிகள் மூன்று. முதன் முதற்படி அவாக்களையும் தன்முனைப்பு உணர்ச்சிகளையும் அடக்கித் தன்னிலை யமைதி பெறுவது. இரண்டாவது தன்னலம் துறந்து பண்பமைதி பெறுவது. மூன்றாவது சிந்தனை, அறிவு ஆகியவற்றைச் செயற்படுத்தி உயர் உள்ள நிலை அடைவது. இம்மூன்று படிகளும் உயிரினப்படி, விலங்கினப்படி, மனித அல்லது தெய்விகப்படி' என்று வகுக்கப்படலாகும். இவற்றின் பண்புகள் முறையே ம அமைதி, மட எழுச்சி, அறிவமைதி அல்லது பண்பமைதி ஆகும்.