(248) ||
அப்பாத்துரையம் – 43
ஆற்றலின் அடிப்படை வலு அறிவமைதிப் படியில் அது கண்டுணரும் அடிப்படை அறிவுத் தத்துவங்களைச் சார்ந்தது ஆகும். இவையே ஆற்றலின் ஊற்றுக்கள், இவற்றை உணர்வதே அவற்றின் மறைதிறவுகள் ஆகும்.
மிகுந்த முயற்சியினால் ஆராய்ந்து தேடியும், பல இன்னல்களை எதிர்த்துப் போராடியும், பலநலங்கள் துறந்து இறுதியாக நிலையான வாய்மையுடைய ஒருமைத் தத்துவத்தைக் கண்டபின்னரே உள்ளத்தில் தெய்விக நிறை அமைதி உண்டாகிறது. சொற்கடந்த இன்பத்தின் ஒளி உள்ளத்தில் நிரம்பித் ததும்புகின்றது. இத்தத்துவத்தைக் கண்டபின் மனம் உலைவதில்லை. மனிதனும் எழுச்சி தளர்ச்சி அலைகளின்றி ஓய்வமைதி பெறுகிறான். அவன் உணர்ச்சிகளின் அடிமையாக இல்லை. உணர்ச்சிகளை வேண்டும்போது பிறப்பிக்கவும் வளர்க்கவும் அடக்கவும் வல்லவனாகிறான். அவன் ஊழ் கடந்தவன்; ஏனெனில் அவன் தன் ஊழைத் தானே ஆக்கிக் கொள்ள வல்லவன் ஆகிறான்.
தன்முனைப்பு வயப்பட்டவன், வாய்மை நெறிப் பட்டவன் ஆகிய இருவருமே ஒருவகையில் ஒருநோக்கம் உடையவர்கள் தாம் என்று ஒப்புக் கொள்ளலாம். ஏனெனில் வாய்மை உடையவனுக்கு அறிவார்ந்த நோக்கம் எப்படியோ, அப்படியே தன்முனைப்பாளனுக்கும் தன்னலம் நோக்கமாய் அமைகிறது. ஆனால் தன்முனைப்பாளன் நோக்கமாகிய தன்னலம் அறிவு சார்ந்த நோக்கமல்லவாதலால், அவன் தன்னோக்கத்தில் காட்டும் உறுதியை முறையில் காட்ட மாட்டான். ஒவ்வொரு தோல்வியிலும் அவன் முறையை மாற்றிக் கொள்வான். தன் நோக்கம் ஈடேற அவன் எந்த முறையையும் கையாள்வான். நன்மைதீமைத் திரிபு வேறுபாடு இவ்வகையில் அவனுக்குக் கிடையாது. ஆனால் வாய்மை நெறிப்பட்ட வனுக்கோ அறிவார்ந்த நோக்கத்திலும், நிலையான முறைகள் அஃதாவது காரணகாரியத் தத்துவம் சார்ந்த முறைகளிலும் உறுதியான பற்று உண்டு. ஆகவே அவன் நோக்கத்தைப் போலவே முறையிலும் உறுதியாயிருக்கிறான். அவன் திருத்துவது முறையையல்ல, தன் பண்புகளை, அகக் கூறுகளை! நோக்கமும் முறையும் மாறாமல் தனிப்பண்பை மாற்றும்