உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

249

அவனைச் சூழ்நிலை எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் அவன் பண்புகள் சூழ்நிலைகளையே மாற்றும் வல்லமை உடையன.

தன்னல நோக்குடையவனுக்குப் பிறர்நலங்கள் யாவும் தடங்கலாகவே இருக்கமுடியும். சூழலும் தடங்கலாயிருக்கும். எனவே, அவனுக்கு ஏற்படும் இன்னல்கள் இடர்கள் எண்ணில. ஆனால் வாய்மையாளன் நோக்கமும் முறையும் மாறாது. துன்பத்தினையும் பண்புமாற்றத்துக்குரிய படிப் பினையாகப் பயன்படுத்திவிடுவதால், அவனுக்கு இடர் என்ற ஒன்று இருக்கமுடியாது. அவன் எதையும் நோக்கத்தை விட்டு நழுவுவது ஒன்று தவிர எதையும் - இடர் என்றே கருதுவது கிடையாது. முள்மேல் நடந்து தொல்லைப் படுவதற்கு மாறாக, அவன் முள்ளைத்தேடி எடுத்து அகற்றி அதனைக் குண்டூசியாகப் பயன்படுத்திக்கொண்டே

-

வாய்மை

நடக்கிறான். இதனால் இடர் அகன்று விடுவது மட்டுமல்ல, இடர்தரும் முள்ளே ஒருநிறை பயனீட்டுப்பொருளும் ஆய்விடுகிறது. நிலைகாணா வெள்ளத்தில் மிதந்து சென்று விடவோ, அதில் மிதந்து செல்லும் படகு தேடவோ அல்லது அது தாண்டும் பாலம் அமைக்கவோ செய்வதுடன் அவன் நிற்பதில்லை. அவ்வெண்ணத்துக்கு அணையிட்டு விரும்பிய வழியில் திருப்பி, அதைக் கடந்து செல்வதுடன், அதைக் கொண்டு, வேளாண்மையும் படகுப் போக்குவரத்தும் கட்டை முதலிய பளுக்களை ஈர்த்துச் செல்லுதல், மின் ஆற்றல் ஆகிய ஆற்றல்களும் எய்தப்பெறுகிறான்.

'தன்முனைப்பாகிய இருளின் அடிமைகள் யார்?' 'வாய்மையாகிய ஒளியின் செல்வர் யார்?' என்பதைப் பொதுப்படையான தறுவாய்களில் காண்பதைவிட, நெருக்கடிகளில் மிகத் தெளிவாகக் காணலாம். ஆட்டு மந்தை ஆடுகள் என்ற வகையில் ஒருநிலைப்படத் தோன்றும், மலையேற நேரும்போதுதான் அதில் வெள்ளாடு எது, பள்ளாடு எது என்பது தெற்றென விளங்கும். நாய்களிலும் இதுபோல, நீர்நிலை எதிர்வந்தபோதுதான், கீழ்த்தர நாய் எது, மேல்தரநாய் எது என்று காணலாம். புலி எதிர்த்தபோதுதான் நாட்டுநாய் எது, வேட்டைநாய் எது என்று காணலாம். பாம்பினத்தின் இறைமை தாங்கும் நாகம் எது, பிற பாம்புகள் எவை என்பதை முன்னது