250
அப்பாத்துரையம் - 43
படம் எடுக்க சமயம் நேரும்போதுதான் தெளிவாகக் காணலாம். அதுபோல நெருக்கடி நேரங்களில்தான் தன்முனைப்பின் அடிமை களாகிய கயவர், வாய்மையின் செல்வர்களாகிய சான்றோர் ஆகியவர்களின் அடிப்படை வேறுபாடுகளைக் காண முடியும்.
நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெறும்போதுகூட, முந்தியவர் ‘முயலெய்த அம்புடை' வேடர் போன்றவராகவே தோற்றுவர். அதில் முழுத் தோல்வியுறும்போது கூடப் பிந்திய வகையினர் ‘யானைபிழைத்த வேலை' உடைய வீரர் போன்று வீறெழத் தோன்றுவர். மிகப்பெரும்பாலான இடங்களில் கயவர் நெருக்கடிகளைச் சமாளிக்கவேமாட்டார்கள். சான்றோரே சமாளித்துச் செயற்கரிய செய்பவர் ஆக மிளிருவர்.
க
உயர் குறிக்கோளுடையவர்கள் அகக்கண்களைக் கூடத் தன்னலம் மிக எளிதாக மறைக்கவல்லது. தன்னலம் பாதிக்கப் படாதவரை, தன் உடைமைகள், நம்பிக்கைகள், முனைப்புக் குரிய செய்திகள் ஆகியவற்றில் உறுதியாய் நின்று கொண்டே ஒருவன் உலக அமைதி, உலக அமைதி சகோதரத்துவம், உலகளாவிய மனித இனப்பற்று ஆகியவற்றில் தனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு என்று நம்பிக் கொண்டிருக்க முடியும். ஆனால் அப்பற்றுக்கெதிராக அக்குறிக்கோள்கள் செல்லத் தொடங் கினதும் அல்லது செல்லத் தொடங்கியதாகத் தோற்றியதும், அவனை அறியாமலே அவன் தன்முனைப்பு அக்குறிக்கோள் களிலுள்ள அவநம்பிக்கையை அலைத்து அழிக்க முற்பட்டு விடும். அவன் நாளடைவில் உலக அமைதிக்குப் பகரமாகப் போரையும், உலக சோதரத்துவத்துக்குப் பகரமாகக் குறுகிய தன்னலக்குழு நலங்களையும், உலகளாவிய மனித இனப்பற்றுக்குப் பகரமாகக் குறுகிய இரண்டகப் பகைமையையும் அணைக்கத் தொடங்கினால் வியப்பில்லை. இதனாலேயே தன்னலத்தோடிணைந்த உயர்குறிக்கோள்கள் நிலையான பயன்தர முடியாமற் போய்விடுகின்றன. தன்னலமறுத்த தன்மறுப் புணர்ச்சியாகிய நிலத்தின்மீதே உயர்குறிக்கோளாகிய கட்டடம் எழுப்பப்பட முடியும்.
குறிக்கோள் தத்துவம் கடந்தது. ஏனெனில் குறிக் கோளுக்காகவேதான் தத்துவங்கள் கண்டுணரப் பெறு கின்றன. ஆயினும் குறிக்கோளின் பெயரைச் சொல்லித்