திருநிறை ஆற்றல்
251
தத்துவங்களைக் கைவிடுவதில் மிகுந்த பிழைபாடு ஏற்பட வழியுண்டு. ஏனெனில் தன்முனைப்பும், அதன் மறைவில் இருந்துகொண்டு தன்னலமும், ஆராயாத தப்பெண்ணங் களும், தற்பற்று நம்பிக்கைகளும் அங்ஙனம் செய்வதற்கு மறைதூண்டுதலாய் இருக்கக்கூடும். குறிக்கோளுக்குத் தத்துவங்கள் எதிரானது என்று முடிவுகட்டுமுன், தன் னலமும் தன்முனைப்பும் அம்முடிவுக்குத் தூண்டுதல் தந்தனவா என்று பார்க்கவேண்டுவது இன்றியமையாதது. இத்தகைய இக்கட்டு நேராமல் இருக்கவேண்டுமானால், நாம் மேற்கூறியபடி தத்துவங்களை மேற்கொள்ளுமுன்பே தன் மறுப்புமூலம் தன்னலத்தையும் தன்முனைப்பையும் வேரற அழித்து விட்டோமா என்று தன்னாராய்ச்சி செய்து கொள்ள வேண்டும். தன்மறுப்பு அல்லது தியாகமாகிய நிலத்தில்தான் தத்துவங்கள் தூய்மையான விதைகளாய், குறிக்கோளை நோக்கிய பயிராய் வளரமுடியும்.
உ
தன்மறுப்பின் அடிப்படையாக எழுந்த தத்துவங்களே குறிக்கோளின் தெய்விகத் தன்மையை நிலைநாட்டு பவை யாகவும் விளக்குபவையாகவும் அமைகின்றன. தன் மறுப்புச் சிலசமயம் தன்னல மறுப்பாக மட்டும் அமையாது. தன் உயிர் மறுப்பாகவும் வளரும். இயேசு பெருமானின் சிலுவை யேற்றம் இத்தகைய தன் உயிர்மறுப்பு ஆகும். அவர் தத்துவங் களின் மதிப்பு இதனாலேயே தனி மனிதர் உடல், உயிர், எல்லை கடந்து, சமூக, கால எல்லை கடந்து உலகளாவியுள்ளது. இயேசு பிரானுக்கிருந்த சமூக எதிர்ப்புப் புத்தர் பெருமானுக்கு ஏற்படவில்லை. ஆயினும் சமூகதத்துவ எதிர்ப்பு இருந்தது.ஆகவே அவரும் மிக உயர்ந்த தன்மறுப்பின் மூலம் தத்துவத்தின் உயர்வை மெய்ப்பிக்க வேண்டியிருந்தது. அவர் துறவின் புகழையே துறந்த அகத்துறவுமூலம் தம் தத்துவங்களுக்குங்காலம், சமூகம், தேசங்கடந்த அழியாத் தன்மை உண்டுபண்ணிவிட்டார்.
அகநிலை ஆற்றல் உள்ளொளிமூலமே கிடைக்கத் தக்கது. உள்ளொளிபெற அகநிலைத் தத்துவங்களை அறிந்து அகப்பண்புகளை வளர்த்துப் பொலிவூட்டல் வேண்டும்.ஆனால் அகநிலைத் தத்துவங்கள் ஓயாத இடைவிடாத பயிற்சி யினாலேயே பெறப்படுவன. உயர் குறிக்கோள், சிறப்பாக உயர்