உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

279

தமைந்த முடிவு எதுவானாலும், அது வாய்மையின் திசை யின் உள்ளது. அதனூடாக வாய்மை மிளிரும். அதன் முற்றொளி அனுபவ முதிர்ச்சியினாலே, துன்பத்தேர்வின் விளைவினாலே, தோல்விகளின் படிப்பினைகளினாலே, அமைதிவாய்ந்த சிந்தனையினாலேதான் பெறத்தக்கது. கறையற்ற தூய உள்ளத்திலேயே அது எழவல்லது.

ன்

உலகில் சமயங்கள், உட்சமயங்கள், கருத்துக்கள், கோட்பாடுகள், மாறாட்டங்கள் பல. இவற்றுள் எதில், எதன் சார்பில் வாய்மை காணக் கிடைக்கக்கூடும்? எதன் சார்பிலும் கிடைக்க வேண்டுமென்றில்லை. எதன் சார்பிலும் கிடைக்கலாம். ஆனால் அது கிடைப்பது கோட்பாட்டை வகுப்பதாலல்ல, அறிவதாலல்ல; அறிந்து தெளிவதாலு மல்ல. அதை வாழ்வில் வாழ்ந்து ஒழுகிக் காட்டுவதாலேயே அது கைவரப் பெறும்.

மதவாதமெனும் சந்தை இரைச்சல் ரைச்சல் கடந்தாலன்றி வாய்மையின் உருவை மயக்கமறக் காணமுடியாது. தன் மதம் ஒன்றே தெய்விக மதம் என்று கருதும் தன்முனைப் பாளரிடையோ, அல்லது எவ்வனைத் தன் முனைப்பேனும் உடையவரிடையோ அது தோன்றாது. மனித இனத்தின் அல்லது இயற்கையின் எந்த ஒரு கூறினுக்குள்ளாகவோ அதைச் செயற்படுத்தி நிறுத்த எண்ணுபவரும் அதன் வழி ஒழுக முடியாது. ஏனெனில் வாய்மையின் பரப்புக் கடவுள், இயற்கை ஆகிய இரண்டின் பரப்பில் ஒரு சிறிதும் குறைந்ததாக மாட்டாது. கோட்பாடாகவும் அது உருவாக்கத்தக்கதன்று.

அது புலன் கடந்த, அறிவுகடந்த ஒன்று. ஆயினும் உணர்வினால் நுகர்ந்து செயலில் ஒழுகிக் காட்டத்தக்கது. தூய நடுநிலையமைதி வாய்ந்த உள்ளத்தில் பண்பாக அது உருவாகி, செயலாக நிழற்படத்தக்கது.

அமைதி தனிமையின் பிள்ளை. ஆனால் அது வளர்ந்த பின் புயல்களை அடக்கும் திறம் உடையது. அறிவின் உதவியால் உலகை இயக்கும் தன்மை உடையது. உணர்ச்சி வயப்பட்ட வரும்கூடத் தனிமையில் ஓரளவு அமைதியுடையவராய் இருப்பது எளிது.இத்தற்காலிக அமைதியை அவர் மேன்மேலும் பயின்றால், படிப்படியாகத் தோழரிடையேயும், செயல் நெருக்கடி