உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

285

பண்பாக உலவி, தெய்விக அரசு நாட்டத் தூண்டுதல் தந்து வருகிறது.

வெங்கடு முயற்சியாலே வியன்புகழ் உச்சி சார்ந்து பங்கமில் பணியால் வந்த வல்லமை ஒளியின் வட்டம் பொங்கும்உன் வதனஞ்சூழப் பொலிந்தனை, பொங்கும்தங்கம் துங்கநல் வாழ்வில் பெற்றாய், தூயநல் இசையும் ஆர்ந்தே! தூயநல் இசைகடந்த தொல்புகழ் இன்னும் உண்டே! மாயுந்தன் முனைப்பின் கூட்டம் மாய்தரக் குருதி சிந்தா நேயப்போ ராட்டமாடி நெருஞ்சிமுள் முடியே சூடி ஆயத்தார்போற்றும் தூய அருந்திருப் பெறுதி நீயே!

அருந்திருப் பெற்றுத் துன்பக் கடல்இன்பக் கடலா மாறு, திருந்திடு வாழ்வு வாழ்ந்து கொடுத்தலால் குறையாதோங்கும் பெருந்திரு ஆனஅன்பு பெருக்கிஇவ் வுலகமெல்லாம் புரந்திடும் அழிவி லாத பொன்னுல கமைதி சார்வாய்!

(1)

(2)

(3)