உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(284) ||

அப்பாத்துரையம் - 43

ஆர்வம், ஆகிய இவற்றுடன் பிறப்பு

இறப்பு, மூப்பு, பிணியே, துயர், பழி இயல்படத் தோற்றும் காரண மறியும்

அறிவின் துணிவு, நன்மை தீமை

நடுநிலை அமைதி

நடு.உளத் திருந்த

செம்பொருள்நாடும் அயராமுயற்சி

அதுபெறும் ஆர்வத் துடிப்பாம் இவையே மெய்யுணர்வாகும், வீறுடை அரசே! வேறுள யாவும் வீண் மடமை என் றறிதி!

என்ற கண்ணபிரான் அறிவுரை இவ்வுண்மைக்கு விளக்கம் தருகிறது.

உரவோர் பிறப்புத் தெய்விகப் பிறப்பல்ல என்பது மட்டுமன்று. மனிதப்பிறப்பிலும் பிறப்பின் தன்மையாலோ, குடியின் தன்மையாலோ அவர்களுக்கு எத்தகைய தனிப் பண்புங் கிடையாது. புத்தர்பெருமான் போல அவர்கள் அரசர்குடியில் பிறக்கலாம். இயேசுபிரான்போல அவர்கள் பொதுமக்களிடையே பிறக்கலாம். அவர்கள் புலமைமிக்க வராயிருக்கலாம். கல்வி நீரோடையின் வாய்ப்பு நலம் அற்றவராகக்கூட இருக்கலாம். தம் குடியின் பெருமை சிறுமைகளால் அவர்கள் பெருமையும் சிறுமையும் பெறு பவர்கள் அல்லர். அவர்கள் பிறப்பால் குடியும் நாடும் பெருமையையடையும். அவர்கள் பிறவாமையால் குடியும் நாடும் உலகமும் சிறுமைதான் அடையமுடியும்.

சமயங்களின் முடிந்த முடிபு யாது? தூய உள்ளமே. தெய்விகப்பண்பின் அடி ச்சுவடும் அதுவே. பிறப்பு இறப்புக்கள் சிறப்புடையச் செம்பொருளின் மறப்பினால் ஏற்படும் ஒறுப்பே. நீடித்த புறநோக்கனுபவத்தாலேயே அகநோக்குப் பெற்று அகத்தே அச்சிறப்புடைச்செம் பொருளின் சீர்சான்ற செல்வம் எய்தப் பெறலாம். அங்ஙனம் பெற்றவர்களே உருவுடைய நாம் வழிபட்டு மேம்படத்தக்க உருவுடைய தெய்வங்கள் அல்லது தெய்விக வடிவங்கள். அவர்கள் செயலலைகளும் சொல்லலைகளும் கருத்தலைகளுமே உலகில்