திருநிறை ஆற்றல்
283
எங்கேனும் உண்டென்றால், அவர்களிடம் அது கட்டாயம் உண்டு; முனைப்பாக, பேரளவில் உண்டு. ஆனால் பொதுவாக மக்கள் தெய்வம், கடவுள் என்றவுடனே மனித நிலைக்கு அப்பாற்பட்ட, அதனுடன் தொடர்பற்ற, ஏதோ ஒரு செப்படிவித்தை அல்லது குறளியாற்றலாகக் கருதி, அதன் மதிப்பை, அருமையை, பெருமையை அழித்து விடுகின்றனர். புலியைக் கைகள் கொண்டு எதிர்த்து நின்று கொன்றவனை வீரமனிதன் என்று கொண்டால் பெருமை உண்டு. அவனை ஒரு மின்வலி ஆற்றல் தாங்கிய பொறி என்று கொண்டால், அவனுக்குப் பெருமை ஏது? அது மின்வலி ஆற்றலாகுமேயன்றி, அவன் ஆற்றல் ஆகாதன்றோ?
உரவோர்களின் பெருமை அவர்கள் மனிதஎல்லை தாண்டிய மனிதத்தன்மையிலேயே, அவர்கள் மனிதப் பண்பு தோய்ந்த தன்மறுப்பிலேயேதான் உள்ளது. அதன் அளவு அவர்கள் மனித இனத்தில் கொண்ட அன்பின் அளவு. அவ்வன்பை நாம் அவர்கள் தன்மறுப்பின் அளவால், தியாகத்தின் அளவால்தான் அளக்கிறோம். அவர்கள் உலகநலன் நாடி மேற்கொண்ட துன்பத்தை நாம் தவம் என்கிறோம். அதற்காக அவர்கள் செய்த தியாகத்தைத் தெய்விக ஆற்றல் என்கிறோம்.
பிறப்பால் இயேசுபிரானும், பிற நாயன்மார்கள், ஆழ்வார்கள், முதல்வர், பகவர் ஆகியவர்களும் தெய்வங் களல்லர், மனிதர்களே! ஆனால் அவர்கள் தம் வாழ்வால் தெய்விக ஆற்றல் பெற்றனர். எல்லார் உள்ளங்களிலும் மறைந்துறையும் தெய்விக ஒளியை அவர்கள் வளர்த்துச் செயற்படுத்திக் காட்டினர். அதே ஒளியை நம் உள்ளங் களிலும் அவர்கள் எழுப்பத் தூண்டுதல் தந்தனர். அவர்கள் பெருமை இது இதனினும் பெருமை தெய்வம் என்ற சொல்லில் வேறு இருக்க முடியாது.
பணிவு, வாய்மை, ஊறுசெய் யாமை பொறுமை, தன்மதிப்பு,மேலோர்வழிபட நிற்றல், தூய்மை, நிறைதன் னடக்கம் நீள்புலன் மறுப்பு, தன்மறுப்பு, பொதுநல