திருநிறை ஆற்றல்
-
289
அகத்தின் பண்பும் ஆற்றலும் கண்டவர் கடவுளைப் பற்றிச் சமயவாதிகள் கழறும் கூற்றுக்கள் மிகையுரைகள் அல்ல, குறையுரைகள் என்பதையும் எளிதில் காண்பர். கடவுளைக் காண ஒருவன் இயற்கையை அஃதாவது அண்டத்தைத் துருவி ஆராயும் புற நோக்கில் செல்லுதல் தவறன்று. ஆனால் அதன் பயனாக அவன் கடவுளின் செயலமைதியையே உணர முடியும். கடவுளின் தன்மைகளை அகத்தன்றிப் புறத்தே உள்ளவாறு காண்டல் இயலாது.கடவுளாற்றல் பெற்றுக் கடவுட் கூறாவதும் புற நோக்குடையார்க்கு என்றும் கைகூடாத செயலாகும். அகநோக்கு ஒன்றே அந்நிலை பெறத்தக்கது.
புற நோக்குடையவன் உலகத்தைப் பலவாகக் காண் கிறான். மாறுபாடும் வேறுபாடுமே அவன் காட்சிக்குப் புலனாகின்றன. இவற்றின் அடிப்படையாக அவன் தன் னலமும் தற்பற்றும், ஒருபுறமும், வெறுப்பும் பகைமையும் மற்றொரு புறமும் பெறுகிறான். இது முரண்பாடுகளை வளர்த்து, இன்பத்தையும் துன்பமாக்கித் துன்பம் பெருக்குகிறது. அகநோக்குடையவர் வேறுபாட்டிடையே காணும் அடிப்படை ஒற்றுமையாகிய பொதுநல, அன்புத் தத்துவத்தை அவன் அறிவதில்லை. அவ்வன்புத் தத்துவத்தை அவன் அறிந்தால், புறத்தே முரண்பாடு தளரும். ஒற்றுமை அமைதி வளரும். இவ்வமைதியே பேரின்பவீட்டுக்கு இட்டுச்செல்லும் ஒடுங்கிய அகஅமைதிப் பாதை ஆகும். இடுங்கிய அவ்வழியில் குழந்தைகள் போன்ற எளிய உள்ளம் உடையார் நுழைவர். பற்றவாக்களின் பளுச் சுமந்த பாரிய உள்ளமுடையவர் அணுகவும் மாட்டார். நுழைந்து செல்லவும் முடியாது.
நுண்புழை போன்றது நுவல் இன்பவாயில், பண்பிலார் காணார்; பழிசேர் உலகின் மாயப் பகட்டுஅதை மறைத்தே நிற்கும். தூய உளமுடையார்க் கது தோற்றினும், செருக்கும் உணர்ச்சியும் சிற்றின்ப நாட்டமும் பெருக்கும் பேரவா முனைப்புச் சீற்றமும் தாழொடு பூட்டாய் வாயில் தடுக்கும்!
வந்தனை வழிபாடுகள் எத்தனை செய்து நீ நொந் தனையானாலும்; சமயச்சார்பான புறவினைகளை நீ எவ்வளவு