(290
அப்பாத்துரையம் - 43
நுணுக்கமாகவும், கண்டிப்பாகவும், விரிவாகவும் நிறைவேற்றி னாலும்; தன்னடக்கமும் அவாவடக்கமும் இல்லாத இடத்தில் அமைதியோ, அமைதியில்லாத விடத்தில் நிலையான இன்பமோ ஏற்படமுடியாது. புதுப்பிறப்பு அல்லது மறு பிறப்பருளும் சிந்தாமணி தன்னடக்கத் துறையில் வெற்றியடைந் தவருக்கே உரியதாகும்.
புறஉலகிலிருந்து, புற உலகப்பொருளிலிருந்து, புலன் சார்ந்த இன்பங்களிலிருந்து, அன்புசாரா அறிவுத்துறை வாதத்திலிருந்து, உலக ஆரவாரங்களிலிருந்து எவ்வளவுக் கெவ்வளவு நீ பின்வாங்கி உன் உள்ளத்தின் உள் அவாக்களுக்குள் சென்று ஒதுங்கு கிறாயோ; எவ்வளவுக்கு எவ்வளவு நீ தன்னல, வேற்றுநல முரண்பாடுகளுக்கு அப்பால் செல்கிறாயோ; எவ்வளவுக் கெவ்வளவு தன்னல அவாக்கள் வந்தெட்டாத் தொலைக்குச் செல்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு ஆழ்ந்த தூய அமைதிவெளியில் நீ ஓய்வமைதியுற்று, சிந்தனை என்னும் அகக்காட்சியின் உதவியால் வாய்மையொளி காண்பாய்! புறத்தே நீ முன்பு கண்ட நிழற் பொருள்களின் மெய்வடிவம், நீ பலவாகக் கண்ட வடிவங்களின் ஒருநிலைப்படிவம் உனக்குத் தெரியும். அது மட்டுமன்று. நீ அப்போது உன் உண்மையான தனிவடிவத்தையும், உனக்கும் உலகுக்கும் உள்ள போலி மாயத்தொடர்பையும், உனக்கும் முழுநிறை வாய்மைக்கும் உள்ள மெய்த்தொடர்பையும் உணர்வாய்; உன் மெய்யான உள்ளம் அப்போதுதான் உனக்குக் கைவரும். ஏனெனில் அது உன் விருப்பப்படி அமையும்.
அகக்காட்சி தரும் இந்நிலையை அறிவின் காட்சிக் குன்றம் என்னலாம். குன்றேறி நின்றவன் உலகின் பரந்த முழுக்காட்சியை அப்போது காண்பதுபோல, நீ அப்போது உலக முழுவதையும் ஒருங்கே, ஒருநிலைபெறக் காண்பாய்.
உன் பழிகள் உனதே. நீ அவாவைப்பற்றி நிற்கும் வரை அவற்றைப் பற்றிக்கொண்டுதான் இருப்பாய். அவற்றை விட்டு நீங்குவது உன் கைக்குள்தான் இருக்கிறது. நீ அவாவை விட்டால், பழிகள் உடனே உன்னை விடும். ஏனெனில் பழிகளின் பழித்தன்மை உன்னைத் தாக்க மாட்டாது. நீ அவற்றைப் பிறருக்கு நிகழும் அல்லது புறத்தே நிகழும் நிகழ்ச்சிபோலக் கருதி அவற்றில் படிப்பினைகள் கோருவாய். அதேசமயம், புதிதாக மேலும்