திருநிறை ஆற்றல்
[291
அவாக்கள் உண்டாகாதிருப்பதால், புதுப்பழிகள் வாரா. அவா அற்ற இடத்தில், வீடு உற்றதாகிவிடும்.
கனி அருகிருப்பக் காய் அருந்த எண்ணுவதேன்? அமைதி எளியார்க்கு எளிதாயிருக்க, புயலை விரும்பி அணைப்பது ஏன்?
குஎ
உன் அகத்தேயிருக்கும் விலங்கியல்பைக் கீழ்ப்படுத்தி அடக்கு. உன் தன்னலக் கூறுகளாகிய கீழ்த்தர உலோகக் கலவைகளை அன்புப் புடத்திலிட்டுப் பொன்மயமாக்கு. அமைதியின் நாயகனான றைவனை நீ அணைவாய்.
இவ்வெற்றியின் மூலம் நீ தசையுடம்பிலிருந்து கொண்டே, அதன் அழிவுத் தன்மையிலிருந்து விடுபடுவாய். வெப்ப அலைகள் வீசியெறியாத இன்பக்கரை சென்று சேர்வாய். அவ்விடத்தில் பெறும் உளநிறை அமைதியும் இன்பமும் பெரிது.
உனதுள மருவும் உயிர்நிலை ஆன்மா, அது ஒருபோதும் மாள் கிலதே! முனம் பிறந்ததுவும் பினர் இறந்ததுவும் கனவு; அது பிறப்பிறப் பில்லா
நனவு; உருமாற்றம் இலாதது; நலிவும், தொடக்கமும், இறுதியும், உலைவும்
தினையதும் அற்ற தெளிவருள் அமைதி
தேர்அதன் மெய்நிலைவடிவே!
மாசற்ற மெய்ம்மையுணர்வு, மடமையின் சாயலற்ற அறிவு, மாறாத மாள்வற்ற எல்லையிலா அன்பு ஆகிய இவையே ஆன்மாவின் தூய தனிவடிவக் கூறுகள். அத்தூய வடிவடைந்த பின் அதன் அமைதி நிலைபேறுடையது.
மக்களுக்கு மெய்யுரைத்திடும் மாண்புடையீரே! தொக்கஐயவெம் பாலையினூடு சென்றீரோ? பொக்க வெந்தழல் துயரினில் புடமிடப்பெற்று மிக்க வேணவா விரிகருத்தாம் இருட்பேய்கள் சிக்க கன்றனவோ? மனம் பொய்ம்மைகள் தேய்ந்து செவ்வியுற்றதுவோ, தெளிதூய்மையில் ஆர்ந்தே?
(1)