உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(294

அப்பாத்துரையம் - 43

உயிர் நீங்கி இடரிடையே உலகுக்கு உழைத்தனர், எதை நாடி? புத்தர்பிரான் ஏழை மாந்தருக்கும் எளிய உயிர்களுக்கும் ஒருங்கே இரங்கினார்; ஏன்? தம் உயிர்தாண்டி, தம் பலம் தாண்டி, தம் இனம் தாண்டி, தம் நலம் துறந்து, தம் புகழ் துறந்து, தம் உயிரே துறந்து அவர்கள் பாடுபடத் தூண்டியது எது? அதுவே கடவுள்!” என்றார்.

‘மகனைக் கண்டவன் தந்தையைக் காண்பான்' என்றார் இயேசு. மன்னுயிரிடம் பாசம் கண்டவன், முன்னுயிரான இறைவனை உணர்ந்தவன். அவன் கடவுளை வெறுத்தால் கூட, கடவுள் அவனை விரும்பாதிரார் என்றே அருளாளர் அனைவரும் அறைகின்றனர். அன்பகத்தில்லார் அவன் இல்லையோ என்று உலகம் ஐயுறுதற்குக் காரணர் ஆவார்.

உயிரைப்போலவே உருவற்றவர் கடவுள் என்பர். ஆனால் மெய்மையின் உருவின் ஊடாக, அறிஞர் அவரைக் காணலாம். அன்புருவினூடாக, அறவோர் அவரேயாகலாம். இம்மூவுரு விலும் கடவுளைக் கண்டவர், அணைந்தவர், கடவுளானவர் திருவள்ளுவர். கடவுளைக்காண வளைந்து வாழ்வுலகுக்கு வெளியே கடவுளை கடவுளுலகைத் தேடும் கருத்துணரா மாக்கள் கொண்டாடும் அத்தனையும் வளைந்து செல்லும் வழிகள் அத்தனையும் கடவுளைக் காணாதவர், அவர் பண்புணராதவர் வகுத்த வழிகளே! கடவுளைக்காண நேர்வழி திருவள்ளுவர் சமயங்களுக்கெல்லாம் மூல முதல்வராய் நின்று காட்டிய வாழ்க்கை வழியே. ஏனெனில் அவர் கடவுளை ‘இங்கு’ கண்டவர், ‘அங்’கல்ல. மகனிடம் தந்தை கண்டவர் அவர். மகனைக் காணத் தந்தையைத் தேடியவர் அல்லர்.

உயிரின் பண்பை உள்ளவாறு உணர்பவருக்குக் கடவுள் பண்பைக் கற்பிக்க வேண்டா. உயிர், உலகு, உயிர் முதல் என்ற முப்பொருளில் உணர்வுக்கெட்டாதது உயிர் முதல்; உணர்வுக்குப் புறம்பானது உலகு. இரண்டின் இயல்பையும் காண உதவுவது உயிரே. ஆனால் தமிழ் ஒளிபெறாது வள்ளுவர் வழிகாணா துழன்ற இடையிருட்காலச் சமயவாதிகள் உயிர்முதலைக் கற்பனை உலகில் தேடினர். இயல் நூலாரே புலனறிவின் குறைபாடறிந்தும் புலன் வழி நின்று உயிரற்ற உலகை அலசுகின்றனர். வள்ளுவர் ஒருவரே உயிர், வாழ்வு, இன்பம் என்ற