உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிர்மணிகள்'

உயிருக்கு உருவம் கிடையாது. ஆனால், உருவுடைய உடல் மூலம் அதன் பண்பைக் காணலாம். உயிர் என்று ஒன்று உண்டா, இல்லையா? இந்தக் கேள்வியை நாம் எழுப்பலாம். அறிஞர் எழுப்பியுள்ளனர் அன்றும்; எழுப்புகின்றனர், இன்றும்! ஆனால் இக்கேள்வி எழுவதே உயிரின் செயலால் தான்!

கடவுள் உண்டா, இல்லையா? - அறிஞர் கடவுள் உண்டு என்று காட்டியபின்னர் எழுந்துள்ள கேள்வியே இதுவும்! அறிஞர் வழிநின்று அதை உணர்ந்தவர், உண்டு என்றும் வாதாட முற்பட்டதில்லை, இல்லை என்றும் வாதாட முற்பட்டதில்லை. அவ்வழி நின்று, அதன் வழிபட்டனர். 'வழிபாடு' என்ற தமிழ்ச்சொல் உணர்த்தும் பண்பு, இதுவே. அறியாதவரே உண்டென்றும் இல்லையென்றும் வாதிட்டுழன்றனர்.

இருசாராரும் வழிபடாதவரேயார்.

கடவுள் உண்டு என்று நிலைநாட்ட வேண்டிய ஆர்வம் காந்தியடிகளுக்கு அவர் அரசியல் வாழ்வின் ஒரு நெருக்கடிக் கட்டத்திலேகூட ஏற்பட்டது. ஆயினும் அவர் ‘வழி நோக்கியவர், வழிபட்டவர்; ‘வள்ளுவர் ஒளியின் ஒரு நிழல் அவர் பக்கம் சாய்ந்திருந்தது. எனவே அவர் வாதம் ஆத்திகர் களுக்குப் புதிது. ஆத்திக உலகம் காணாதது. அத்துடன் நாத்திக உலகத்திற்கும் அது எதிர்பாராதது. அது அவர்கள் நாவுக்குத் தடையாயிருந்தது. மரத்தை நட்டவன், பானையைப் புனைந்தவன் ஆகிய பழைய வாதங்களை அவர் நாடவில்லை. கல்லினுள் தேரையையும் கருப்பைக்குள் முட்டையையுங் கூட அவர் சுட்டிக்காட்டவில்லை. இவற்றை விஞ்சிய தெய்வப் பண்பை அவர் பொதுநிலை உயிர் வாழ்விலேயே கண்டார்.வரலாற்றிலும் கண்டார். 'தாய் பிள்ளையை நேசிக்கிறாள். தன் உயிரைவிட நேசிக்கிறாள். எதனால்? இயேசுபிரான் சொன்னார் இதழ் தாங்கி