உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அப்பாத்துரையம் – 43

எனக் கூறினர் ஒழுக்க நூலான்ற செந்நாப்புலவர். காலமறிந்து, பயனறிந்து இடமறிந்து செய்யப்படும் உதவி தினைத் துணையாயினும் பனைத் துணையாகப் 'பயன் தெரிவா’ரால் கொள்ளப்படுதல், இவ்வகையிலேயே என்பதும் காண்க.

புலனுகர்ச்சியையே வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவன்,வரையிறந்து உண்டு குடித்து இன்பம் துய்ப்பவனா கின்றான்.உண்ணும் உணவும், பருகுநீரும் வாழ்வுக்கு வகையெனக் கொள்ளாது ஊணுக்கும், குடிக்கும் வாழ்வு ஒருவகை, எனக் கொள்கின்றனர். இப் பேரூணரும், பெருங்குடியரும் இவர்கள் முதலில் உலகுக்குச் சுமை ஆகி, பின் தமக்குத் தாமே சுமையா கின்றனர். உடல் நலமிழந்தும், இளமையில் முதுமை எய்தியும் வாழ்வின் இடைப்போதிலிருந்தும் இவர்கள் கழிவது கண்டும், இவர்கள் வழியில் மக்கள் செல்ல நினைத்தல் வியப்புடைய ய தேயாகும். இத்தகையோருள் பலர் தாம் உழையாது உண்பதால் தம் உணவுக்கே தாம் தகுதியுடையவர் அல்லர் என்பதை மறந்து, தம் மீதூண் விருப்பிற்காக, தம் பல்சுவையுண்டிக்காக, மற்றையோரைப் பின்னும் ஏவலாளராகவும், ஏவுவிப்போராகவும் கொண்டு உழைக்கச் செய்து உண்கின்றனர். தனி மனிதர் உயர்வு தாழ்வு பேணும் இக்கால உலகில் இவர்கள் சிலகால மேனும் தனி மனிதராக உயிர்பேண முடிகிறதாயினும் இயற்கை இத்தகைய தொரு மரபையும், நாளடைவில் அம்மரபு பேணும் வகுப்பையும் இனத்தையும், அழித்தல் ஒருதலை. பொருளீட்டுதலே குறிக்கோளாகக் கொண்டு வாணிக உலகை ஆட்டிப்படைத்த பினீசியரும், கார்த்தஜீயரும், வெனீசியரும் அழிந்ததும், வெற்றிநாடிப் போர் செய்து பேரரசாட்சி செய்து உரோமரும், கலைச்சுவை நாடி உண்டு உடுத்துப் பிறரை அடிமைகொண்ட கிரேக்கரும் அழிந்ததும் இம்மரபினரின் பெருக்க வளர்ச்சிக்கும் அவர்கள் உதவியதனால் என்பது மறக்கத்தக்கதன்று.

66

உழைத்து உண்க; உழைப்பவரைப் பேணி உண்க; உழைப்பவரை அடக்குமுறை செய்யாது உண்க; உழைப்பவரை அவமதியாது, அஃதாவது பயனழியாது உண்க,” இவையே எளிய ணவு பற்றி கட்டளைகள்.

66

அருவருப்புக்கிடனற்ற, தன் உடல் நலமும், பிறர் உடல் நலமும் பேணத்தக்க, கூடுமானால் பொதுக் கலைப் பண்புக்கு