நல்வாழ்வுக் கட்டுரைகள்
17
உகந்த நல்லுடை உடுக்க,” இதுவே உடை பற்றிக் கூறத்தக்க பொது
உரை.
இக்காலத்தவர்க்குச் சிறப்பாக இன்னொருவரையும் உரியதாகிறது. “தன் நிலைக்கு ஒவ்வாத அல்லது மேற்பட்ட உணவு உடையில் நாட்டம் கொள்ளற்க,” இதன் பொருள், “உயர் உணவு, உயர் உடைகளை வெறுக்க,” என்பதன்று. இவை நன்றெனப்பட்டால் இவற்றிற்கான நிலையையடைந்து அதன் பின் இவற்றைக் கொள்வதில் கேடில்லை. ஆனால், தன் நிலைக்கு மேம்பட்ட நிலையையுடையவன் என்று காட்டுவதற்கான இன்றியமையாத தேவைகளைக் குறைத்துப் பகட்டுணவு ஆடையும் மேற்கொள்வது தற்கொலை அல்லது தற்பண்புக் கொலையாக முடியும். அதனால் கடன்பட்டுப் பின் தம் பகட்டும் இழந்து, அதில் நாட்டங்கொள்ளுமுன் இருந்த நிலையையும் இழந்தவர்கள் பலர்.
தம் நிலைக்கு மேம்பட்ட வாழ்வை நாடி அதற்கான வீண் செலவு செய்யும் வேறு சிலர், இத் தற்கொலையினின்றும் தப்புவதற்காகத் தகாத வஞ்சனை வாழ்வும் மேற்கொள்கின்றனர். இவை சிறு தீமைகளை விலக்கும் பெருந்தீமைகளாகத் தற்கொலையினின்று தப்பும் தற்பண்புக் கொலைகளாகவே அமைகின்றன. தற்கொலையினால் இறப்பது தனி உயிர் மட்டுமே. ஆனால், இத் தற்பண்புக் கொலையினால் அதற்கு இடந்தரும் மரபும் குடியும் இனமும் யாவும் ஒருங்கே கெடும்; 'ஏழு பிறப்பும் கெடும்;' 'ஊ ஊருடன் கெடும்' எனக் கூறிய கூற்றுகள் இத்தகைய பண்புக் கேடுகளைக் குறித்தவையே. அவை மேலீடாகப் பார்ப்பவர்கட்டு உயர்வு நவிற்சியணிகள் போலத் தோன்றினும், உள்ளூர நோக்கின் தன்மை நவிற்சியணிகளேயாகும்.
உழைப்பின்றி வாழும் இன்ப வாழ்வினரால் நாடும் மக்களுலகும் அடையும் கேடுகள் எண்ணில. சட்டங்கள் மூலமும் பழக்க வழக்கங்கள் மூலமும் நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பிறப்புக் காரணமான உயர் குடியினரும், சிறப்புக் காரணமாக உயர்குடி மரபினரும் படைத்துண்டு பண்ணப்படுகின்றனர். அவர்கள் சிறப்புக்காக, நல்வாழ்வுக்காகச் செலவு செய்யப்படும் பொருள் நாளடைவில் உழைப்பவர் தலையில் வரிகளாகவும், போதிய நல்வாய்ப்பின்மை, கல்வியின்மை நல்லுணவு உடை