இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நல்வாழ்வுக் கட்டுரைகள்
27
வளர்க்காது. அவன் உயர் சமூக நலனுக்குப் பயன்படும் அளவிலேயே, சமூகம் அவன் பண்பு பேணி வளர்த்துத் தானும் வளரும். சமூகத்தில் அவன் அடையும் மதிப்பு, நாளடைவில் அவன் உழைப்பின் பண்பைச் சமூகம் மேற்கொள்வதனாலேயே அமையும். அவன் தன்னலத்தை மற்றும் மறுத்துப் பொது நலம் பேணுபவனாயிருந்தால், சமூகம் அவனால் உயர்ந்து, அவனுக்கும் அவன் பெயருக்கும் அழியாப் புகழை உண்டுபண்ணும். இச்சமூக உயர்வை நோக்கமாகக் கொண்டவர்களே விலங்குநிலை வாழ்விலிருந்து உயர்ந்து, மனித நிலையில் வாழ்பவர் ஆவர். இப் பண்பில் ஒவ்வோர் இளைஞனும் இளமங்கையும் தோய்ந்துள்ள நாடே உலக நாகரிகத்தில் உச்சியில் நிற்கும் நாடு ஆகும். அதன் மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவை உலகில் சிறத்தல் ஒரு
தலை.