உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அப்பாத்துரையம் – 43

ஏனெனில், இத்திட்டத்தின் வெற்றிக்கு இதுவே பயன் அளிக்கும். தவிர, வழக்கத்துக்கு மாறுபட்ட சிறு செய்திகள் நாட்போக்கில் சிறப்படைந்து விடக்கூடும். நாட்குறிப்பு இவற்றைத் தொகுத்துணர உதவும் தனித்துறைப் பணியாளர் பலர் நாட்குறிப்பின் மூலம் தம் பணியில் அரும்பெரு வெற்றிகள் கண்டுள்ளனர்.

நாட்குறிப்பைப் போன்ற மற்றொன்று வரவு செலவுக் கணக்குக் குறிப்பு இங்கும் திட்டம் வகுத்து அதில் மாறி வருவனவே சிறப்பாகக் குறிக்கப்படல் பயனுடையது. தீய செலவுகள், பயனில் செலவுகள் ஆகியவற்றைக் குறைக்கவும், நற்பயன் தரும் செலவுகளை எடுத்துக்காட்டி ஊக்கவும் இது பெரிதும் உதவும்.

வாழ்க்கைக்கான வருவாய்த் தொழிலுடன் வாழ்க்கை மேம்பாடு கருதிய ஒரு கலைத்தொழிலும், ஓய்வுகாலப் பொழுதுபோக்கிற்குப் பெரிதும் பயன்படுவது. வாழ்க்கைத் தொழிலில் விருப்பு மிகுதியில்லாமல் போகிறவர்களுக்குக் கூட, இஃது அத்தொழிலின் வெறுப்பைக் குறைக்கும். ஓய்வுக் ா லத்தினை இன்பக் காலமாக மாற்றி இது வாழ்க்கை ன்பத்தினையும், ஓய்வின் பயனையும் பெருக்குகிறது. இக்கலைத் தொழில் ஒருவன் விருப்பத்தைப் பொறுத்த தாயினும், இதன் உயர்வும் வெற்றியும் அவன் வாழ்க்கையை உயர்த்துவதில் வாழ்க்கைத் தொழிலினும் சிறந்தது. பலர் கலைத் தொழிலில் வருவாய்பெற்று, அதனையே முழுவாழ்க்கைத் தொழிலாக்கி சிறப்படைந்துள்ளனர். உலகின் தலைசிறந்த அறிஞரும், கலைஞருள் பலரும் தம் விருப்பத் தொழிலையே வாழ்க்கைத் தொழிலாக்கியவராவர்.

வாழ்க்கையின் வெற்றிக்கான திறவுகோல், “தனி மனிதன் வாழ்க்கை முற்றிலுந் தனிமனிதனைச் சார்ந்ததல்ல” என்பதை அறிவதேயாகும். தனிமனிதன் சமூகத்தின் ஓர் உறுப்பு மட்டுமே. அவன் வாழ்வு தாழ்வுகள் அச்சமூகத்தின் வாழ்வு தாழ்வுகளுடன் நீக்கமறப் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, தன் உயர்வுக்கு மட்டும் ஒருவன் உழைத்தால், அவன் அதில் ஓரளவு வெற்றிகாண முடியும். அவ் வெற்றியும் நிலைத்து நிற்காது, சமூகம் அவனைப் பின்பற்றி அவன் பண்புகளைப் பேணாது; அவன் புகழையும்