உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அப்பாத்துரையம் - 43

விடாய்தீரத் தான் நீரைக் குடிக்காது, பெடையைக் குடிக்க விடும் மானையும் யானையையும் நல்லிசைப் புலவர் பாடல்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

பெரியார் பலரின் வாழ்க்கை இதற்கு நேர்மாறாக,தெய்வீக அஃதாவது நல்லருள் மனப்பான்மையைக் காட்டுகிறது. அவர்கள் தனிமனிதர் வாழ்வை முற்றிலும் புறக்கணித்துப் பொதுவாழ்வுக்கே தம் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்படைக்கின்றனர். இதனையே அறநூலார்,

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”

(குறள். 72) எனக் குறித்தனர். இவ்வுயர் நெறியைத் தனிமனிதர் பின்பற்றின் உலகம் மேம்பாடையும் என்றெண்ணியதாலேயே, ஒழுக்க நூலார் இதனை உயர்க்குறிக்கோளாக எடுத்துக்காட்டுகின்றனர்.

ஆயினும் தம் வாழ்வின் தனிநலம் விடுத்து மக்கள் பொது நலம் பேணும் இப்பெரியார், தம் கடமையில் ஒரு செம்பாதியையே ஆற்றினர் என்று எடுத்துக்காட்டுதல் தவறாகாது. மறுபாதியை அவர்கள் பொது மக்கள் கடனாகவே விட்டுச் சென்றனர். மக்கள் அக்கடனைச் சரிவர அறிந்து ஆற்றாவிடின், வரும் கேடு அப் பெரியார் தனி நலனுக்கு அன்று, பொது நலனுக்கே என்பதும் குறிப்பிடக்கத்தது.

ன்னொரு வகையில் கூறுவதானால், கலைக்காக வறுமையிடையேயும் உயர் பணியாற்றிய கலைஞனுக்குச் சமூகம் தனி நலனும் தந்திருக்குமானால், அவன் கலை இன்னும் உயர்ந் திருக்குமன்றோ? கலைஞர் தனி வாழ்வு செம்மைப்பட் டிருக்கு மானால், வெற்றிகண்ட சிலராகிய பெரியாரின் வெற்றியும் பெருக்கடைந்திருக்கும். வெற்றி காணாது மங்கிமாண்ட பலருடைய தோல்விகளும் வெற்றிகளாயிருக்கும் மன்றோ? தன்னலம் பேணும் பெரும்பாலாரடங்கிய சமூகம், அதற்காக வாழும் இத்தகையோர், தம் வாழ்வில் வறுமையுறும்படி செய்து, தன்னையே எத்துணை வறுமைப்படுத்திக் கொள்கிறது.

உலகத்தில் பெரும்பாலார் இவ் விலங்கியல் தன்மையினரான அறிவிலாத் தன்னல வாழ்வினரேயாதலால், உலக நலத்தில் அக்கரை கொண்டுள்ள பெரியார், சிறியார் யாவரும் முன்பிலும்