உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

31

பொதுநலத்துக்கே உழைத்தல் அப்பொதுநல வகையிலேயே குறைபட்ட செயலாகும். பெருந்தன்மை என்பது பெரும் பயன் தரும் தன்மையாகும். தன்னலம் பேணுவதினும் பொதுநலம் பேணுதல் எவ்வளவு உயர்வோ, அல்லது எவ்வளவு அறிவுடைய செயலோ; அவ்வளவும் பொதுநலம் மட்டும் பேணுவதிலும், தன்னலம் பேணிப் பொதுநலம் பேணுதல் உயர்வும் அறிவும் உடையதே யாகும்.

பெரியார் பலரைப் போலவே பெரும்பாலும் பிறர் நலனுக்குத் துரும்பாயுழைக்கும் பெண்டிரைப் பற்றிக் கூறுகையில் செந்தாப்புலவர்,

66

“தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

(குறள். 56)

எனக் கூறியதின் உட்கொள் இதுவே. எல்லாரும் உரிய குறிக்கோளுடன் தான் இருக்க வேண்டும். ஆனால், எல்லோருமே செய்கரிய செய்பவராய்த் திகழவேண்டும் என்பதில்லை திகழ்வர் என்று கூறவும் முடியாது. இந்நிலையில் அச்செயற் கரிய செய்த பெரியாரிடம் உள்ள ஒரு குறைபாட்டை, அஃது எவ்வளவு சிறியதாயினும், அவன் ஏற்றுக்கொள்ளுதல் தவறு என்பது கூறாமலே விளங்கும். ஒருவர் குறைபாட்டைப் பின்பற்றுவதனால் நிறைவைப் பின்பற்றியவர் ஆகமாட்டோம். குறைபாட்டைப் பின்பற்றுதல் எளிது; நிறைவைப் பின்பற்றுதல் அரிது. இந்நிலையில் நிறைவைப் பின்பற்றுவது எவ்வளவு முதன்மையோ, அவ்வளவு குறைபாட்டைப் பின்பற்றா திருப்பதும் முதன்மையே யாகும். ஏனெனில் நிறைவைப் பின்பற்ற முடியாதவிடத்தில், குறைபாட்டை மட்டும் பின்பற்றி விட்டால், அது பெருங்குற்ற மாய்விடும்.

மேலும், பொருளில் அக்கரையற்றவனாயிருப்பதனால் ஏற்படும் குறைபாடு இது மட்டுமன்று. பொருள் தேடுவதன் மூலமே ஒருவன் சமூகத்தையும் வாழ்க்கையையும் மக்கள் இயல்பையும் நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.

தனிமனிதன் தன்னைத் திருத்திக்கொள்வதைவிட, உலகம் தன்னைத் திருத்திக்கொள்வது எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும்.பெரியார் வாழ்க்கையிலீடுபட்டு, அவர்கள் பகட்டான