உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

33

வறிஞர், அறிஞர் ஆகிய இருவர் பற்றியும் அக்கரை காட்ட மாட்டார்கள். பெரும்பாலும் செல்வர் ஆதிக்கத்திலேயே இருக்கும் அரசியல்களும், செல்வர் வகுத்த தன்னல அடிப்படையிலிருந்து தம்மை எளிதில் விடுவித்துக் கொள்ள முடியாது. அரசியல்கள் மட்டுமின்றிச் சமூகப் பழக்க வழக்கங்களும், சமயங்களும், அறிவு, கலைத் துறைகளுங்கூடப் பெரும்பாலும் செல்வர் ஆதிக்கத்தின் சாயலிற்றோய்ந்துள்ளன வாகவே இருத்தல் காணலாம். ஆகவே, தன்னையும் பேணி உலகையும் பேணும் பொறுப்பு முற்றிலும் உலகின் அடிப்படை உண்மைகாணும் மெய்யறிஞர்களைச் சார்ந்ததேயாகும்.

வாழ்க்கையில் வெற்றி பெறாதவறியோர் தன்னலமுடைய வராயினும், தம் வறுமையின் காரணம் அறியாத நல்லோரேயாவர். தம் வறுமை சமூகத்தின் வறுமை என்பதையும், தமக்கு மட்டுமன்றிச் சமூகத்திற்கும் அனைவரும் உழைத்தாலன்றி பெரும்பாலோர் வறுமை ஒழியாதென்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.

வாழ்க்கையின் வாயிற்படி கடந்து, வாழ்க்கையிற்புகும் ஒவ்வோர் இளைஞரும் மனதிற் பதித்துக்கொள்ள வேண்டியது இதுவே. தன்னலம் நீங்கிய பொதுநலம் என்றும் ஒன்று இல்லை. பொதுநலம் நீங்கிய தன்னலம் என்றும் ஒன்று இல்லை. சமூகத்திலிருந்து ஒதுங்கித் தன்னலம் பேணுபவன் பொது நலனை அழித்துச் சில நாள் வாழலாம்; ஆனால், அவனால் பொதுநலனும் அழியும்; நாளடைவில் அவன் தன்னலனும் அழியும். தன்னலம் விடுத்துப் பொதுநலனுக்கு வாழ்பவன் அப்பொது நலத்துக்கு ஓரளவு உதவலாம். ஆனால் அவன் சுவரை யழித்துச்சித்திரம் வரைபவன் போல, நிறையபயன் தர மாட்டான். பொதுநலத்துக்கு கந்ததன்னலம் ஒன்றே இளைஞர் முன் இருக்க வேண்டிய குறிக்கோள் தனக்குப் பொருளீட்டித் தான் வாழ்ந்து பிறரும் வாழ உழைப்பதனாலேயே நடைபெறக்கூடும்.

து

"பிறர்க்கென வாழ்தல் பெரியார் தன்மை; தனக்கென வாழ்தல் பொதுப்படையான மனிதர் தன்மை,” எனதான் ஒழுக்க நூல் பாராட்டும் பலரும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த உண்மை நிலையை உற்று நோக்கினால், நாகரிக சமூகத்தில் ஒவ்வொருவன் இயல்பும் பிறர்க்கென உழைப்பது