நல்வாழ்வுக் கட்டுரைகள்
35
செல்வம் தொகுத்துள்ளவரை அல்லது வருவாய் மிகுதியுடைவரைச் செல்வர் என்றும், செல்வம் தொகுக்காத வரை அல்லது வருவாய் குறைந்த வரை ஏழை என்றும் கூறுவது உலக வழக்காயிருக்கிறது. ஆனால், ஒழுக்க நூலார் உலக மக்களைச் செல்வர் என்றும், வறியோர் என்றும் வகுக்கும் முறை உலகியலார் முறையினின்றும், பெருளயலார் முறையினின்றும் வேறுபட்டது. வருவாய்க்குட்பட்டு வாழப் பழகியவர்களையும், செலவுக்குத் தக்க வருவாயைத் தாமே ஈட்ட முயல்பவர்களையும் அவர்கள் செல்வர் என்கின்றனர். வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்பவர் களையும், பிறர் உதவியை எதிர்நோக்கி மிகுதியாகச் செலவு செய்பவர்களையும் அவர்கள் வறியோர் என்று கூறுகிறார்கள் வேறு வகையில் கூறுவதானால், ஒழுக்க இயலார் குறிப்பிடும் செல்வர்கள், தற்சார்பும், தற்பண்பும் உடையவர்கள். அவர்கள் கருத்தில் பிறர் சார்புடையவரும், பிறரை எதிர்பார்த்து வாழ்பவருமே உண்மையில் வறியோர்!
"உலகியலார் கணக்கில் நீ வறியவனாயினும் ஆகுக; செல்வனாயினும் ஆகுக. பொருளியலார் கணிப்பில் நீ வறிஞனாயினும் ஆகுக; செல்வனாயினும் ஆகுக. ஒழுக்க நூலார் குறித்த வறிஞனாகாமல் செல்வனாதல், உன் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது உறுதி. மற்ற இரு துறைகளிலும் செல்வனாவது, ஒரு வேளை உன்னாற்கூடாமற் போகலாம். ஏனெனில் அது முற்றிலும் உன் செயலை மட்டும் பொறுத்தன்று.”
66
"ஆனால் இவ்வொழுக்க முறையில் செல்வனாவது, எவருக்கும் முடியக்கூடியதே. ஏனெனில் அது தன் முயற்சி ஒன்றினாலேயே முற்றிலும் கூடவல்லது.”
போதிய விடாமுயற்சியின் பேரில் உலகியலார் முறை யிலும், பொருளியலார் முறையிலும் செல்வனாவதுகூட அவனுக்கு இத்திறத்தில் எளிதாகும். அத்துடன் பிறவகைச் செல்வம் போல் மக்கள் மதிப்புக்கும் அச்சத்துக்கு மட்டுமின்றி, இஃது அவர்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியதாயிருக்கும்.
செல்வத்தை அடைவதில் உள்ள மறை திறவு, செலவுத் திறனுக்கேற்றபடி ஈட்டு என்பதல்ல ஈட்டும் திறனுக்கேற்றபடி, அதுவும் பிறரைச் சாராது எதிர்பாராது ஈட்டும் திறனுக்கேற்றபடி செலவு செய்து வாழ் என்பதே. இங்ஙனம் செய்பவன்