உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

37

மதிப்பைப் பேணுவதில் பிறர் நலத் தொண்டுக்கும், அறிவுப் பணிக்கும் தக்க முதலாவதும் வேறில்லையென்றும்; தேவைகளை வருவாய் அளவுக்கு இசையக் கட்டுப்படுத்தினாலன்றி, ஒருவன் உண்மைச் செல்வனாக வாழ முடியாதென்றும் காட்டினோம். ஆனால், செல்வத்தைப் பற்றிக் கருத்தில்லாமலிருக்கக் கூடாது என்றதனால், செல்வத்தையே வாழ்க்கைக் குறிக்கோளாக கொள்வதும் செல்வத்தை வைத்தே தன் மதிப்பையோ, பிறர் மதிப்பையோ அளவிட்டுக் காண்பதும் சரி என்று கொண்டுவிடக் கூடாது. செல்வத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்கள், தாம் செல்வர் என்று பிறர் கருதுவதற்காக, வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்து வறுமை அல்லது அடிமையை வளர்ப்பர். செல்வத்தை வைத்துப் பிறரை மதிப்பவர்களோ மக்கள் குணத்தை உண்மை யில் அறியமாட்டாதவர்களாவர். செல்வருள் நல்லவரும் உண்டு; தீயவரும் உண்டு. நல்ல வழியில் செல்வமீட்டிய மேலோரும், தீயவழியில் ஈட்டிய கீழோரும் உண்டு. வறியவருள்ளும் நல்லோரும், தீயோரும், மேலோரும், கீழோரும் உண்டு. செல்வத்தையே நன்மை எனக்கொண்டு வறுமையைத் தீமையெனக் கொள்பவர் பெரும்பாலும் தீய வழியில் செல்வ மீட்டித் தீய வழியில் செலவிடும் கீழோர் உறவே பேண முடியும்.

செல்வத்தையே தெய்வமாக மதிக்கும் நாடுகளில்தான் தற்கொலைகள் மிகுதி. ஏனென்றால், செல்வத்தையே மதிப்பவர் தம்மை எப்போதும் வருவாயினும் உயர்ந்த செல்வ நிலையிலுள்ளவராகக் காட்டிக் கொள்ளவே விரும்புவார். நல்லவன், மதிப்புடையவன் என்பதனிடமாக அவர்கள் அகர வரிசையிலுள்ள ஒரே சொல் செல்வன் என்பது கெட்டவன் கீழோன் என்பதற்கேற்ற அவர்கள் சொல் வறியவன் என்பது. நல்லோரும் மேலோரும், மான அழிவுக்கு அஞ்சுவதுபோல. கோழைகள் சாவுக்கு அஞ்சுவதுபோல, இவர்கள் வறியவர் என்று கருதப்படுவதற்கு அஞ்சுவர். உலகில் பலர் தற்கொலைக்கு முனைவது அவர்களால் வாழ முடியாது என்பதற்காகவல்ல. அத்தகைய நிலை மிக அருமையாகவே ஏற்படக்கூடும். ஆனால், எப்போதுமே வரவுக்கு மீறிச் செலவு செய்து வாழ்பவர்களுக்கு அவர்கள் வெளிப்பகட்டு வாழ்வே ஓர் ஓயாப் போராட்டம். அதில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடும் விடுதலை தற்கொலை ஒன்றுதான். வறுமையினால் தற்கொலை, வீரத்தினால்