38
அப்பாத்துரையம் - 43
தற்கொலை, மானத்துக்கஞ்சித் தற்கொலை, மனக்கோளாற் றினால் தற்கொலை ஆகிய பலவகைத் தற்கொலைகளிலும் இஃது இழிந்து எவ்வகை மன்னிப்புக்கும் இடந்தராத தற்கொலையாகும். னெனில் இத்தகைய தற்கொலையைச் செய்யும் இயல்பினர் கூட, இதன் காரணத்தை வெளியிட்டுக் கூறமுடியாது. இவர்கள் தற்கொலை மானத்தைக் காப்பதற்கு மாறாக, மானத்தைக் குலைப்பது; கிறுக்கிகர் தற்கொலையைவிட இஃது இரங்கத் தக்கது; அதனைப் போலன்றி இது மிகவும் வெறுக்கதக்கது.
செல்வப் பகட்டின் உடனொத்த மற்றொரு தீங்கு, கடனாகப் பொருள்கள் வாங்குவது. கடனாகப் பொருள் கொடுப்பவர் ஏழைக்குக் கொடுப்பதில்லை. எனவே, அதனை ஒரு நட்புதவி என்று கூறமுடியாது. காசு பெறாமல் அவர் கொடுப்பது ஒரு பயனையும் எதிர்பாராமலா? கடனுக்குப் பொருள் கொடுக்கும் போது பெரும்பாலும் விலை மிகுதியாகவே இருப்பதும்,பொருள் இழிந்ததாகவே இருப்பதும் இயல்பு. கணக்கில் அடிக்கடி தொகை விடுபடுவதும் அரிதன்று. விடுபடுவதும் பெரும்பாலும் கடன் கொடுத்தவர் வரவில் விடுபாடாயிருக்காது. இத்தகைய நட்டங்கள் மட்டுமேயன்றி, கடன் பெறுபவர் தரப்பில் வேறு சில கெடுதல்கள் உண்டு; கணக்குத் தீர்க்கும் சமயம் வரை, அவர்களுக்குத் தாம் செலவு செய்யும் செலவின் அளவு தெரியவராது. அவ்வப்போது கைப்பணம் கொடுப்பவர் மிக அவசியமான செலவுகளுக்கு மட்டுமே பணம் கொடுப்பர். கடன் பெறும் வழக்கம் மெத்தனமான மிகுதிச் செலவைத் தூண்டுகிறது. அடிக்கடி வருவாய்க்கும், செலவு செய்பவர் சக்திக்கும் மேற்பட்டுக் கடன் பெருகி விடுவதுண்டு. காலத் தவணைகளில் முழுவதும் கொடுபடாது விடப்பட்ட மீதித் தொகை பெருகி ஆளைக்கரைப்பதும் கவிழ்ப்பதும் உண்டு.
கடனுக்கு மாறாகப் பொருளகமுறி(cheque) கொடுப்பதும் கடனைவிட மிகுதியுஞ் சிறப்புடையதன்று. பொருளகத்தில் பொருளிருந்தாலன்றிப் பொருளகமுறி செல்லுபடி ஆகாது. பொருளாளருக்கே தன் பொருளகக் கணக்கின் இருப்பு நினைவின்றி, மிகுதி முறி கொடுக்க நேரலாம். மற்றும் நேரடியாகப் பொருள் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் தம் பொருள் நிலையின் நிறைவு குறைவு பற்றிய தகவல்கள்