40
அப்பாத்துரையம் – 43
மட்டுமே வேலையாட்களை வைத்திருப்பது, மிகமிகத் தவறு உண்மையில் அவர்களால் வரும் மதிப்பைவிட, அவர்கள் வேலை முறைகளால் வரும் இக்கட்டுகளும், சில சமயம் அவமதிப்புகளும் மிகுதி. மதிப்புக்காக வேலைக்காரரை ஏற்பவர், அவர்களை உறவினர் போலவோ, நண்பர் போலவோ நடத்தமாட்டார்கள். அடிமைகளை அதட்டுவது போலவே அதட்டுவர். இதனால் வீட்டாளர் வேலையாட்களிடையே அன்பும், நல்லெண்ணமும் கெட்டுவிடுகிறது. காணாத இடத்திலும், சில சமயம் கண்ட இடத்திலும் முணுமுணுப்பும் வெறுப்பும் மிகுதியாய்விடுகிறது. உறவினர்களைவிட வேலையாட்கள் வீட்டில் நெருங்கிப் பழகுவதால், வீட்டுக்குரியோர் குற்றங்குறைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பை அவர்கள் உடையவராகின்றனர்.
இத்தகைய காரணங்களாலும் ஊதிய வகையில் வரும் வெறுப்பினாலும் தூண்டப்பட்டு வேலைக்காரர் வெறுப்பு, பகைமை ஆகியவற்றுக்குள் அடக்கி வைக்கப்பட்ட குண்டுகளா கின்றனர். இங்ஙனம் நடத்தப்படும் வேலையாட்கள் ஏழைகளில் ஓர் அடிமை இனமாகி, சோம்பல், வெறுப்பு, மனக்கசப்பு ஆகியவற்றின் விளைநிலங்களாகி விடுகின்றனர். இன்றியமையாத் தேவைக்காக அமர்த்தப்பட்ட இடங்களில்கூட அடிமைப் பண்புகளில் பழக்கப்பட்ட இந்நச்சு வகுப்பு, தீயவரும் எண்ணக் கூடும் செயல்களைச் செய்பவர்கள், தூண்டுபவர்கள் அல்லது வளர்ப்பவர்கள் ஆய்விடுவதுண்டு.
வருவாய்க்கு உட்பட்டுச் செலவு செய்தால் மட்டும், வறுமையை முற்றிலும் ஒழித்துவிட முடியாது.வருவாய் இல்லாத காலத்துக்கு உதவவும், தொழில் மேம்பாடு, வருவாய் மேம்பாடு கருதியும், நல்வாழ்வு, எதிர்காலப் பாதுகாப்புக் கருதியும் சிறிது சிறிதாக ஓரளவு பொருள் மீத்து வைப்பது பொருளீட்டும் ஒவ்வொருவர்க்கும் உரிய கடமை ஆகும். நோய்ப்படுதல் குடும்பத்தில் எதிர்பாராச் செலவுகள், போக்குவரவு ஆகியவை நேர்ந்தால் திட்டப்படியான செலவுக்குமேற் செலவும் ஏற்படும். தவிர வாழ்க்கைத் தொடக்கத்தில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி நல்வாழ்வும் அதிலுள்ள வாய்ப்பும் பெற மீத்து வைப்பு இன்றியமையாதது. தன் கல்வியும் குடும்பம், குழந்தைகள் ஆகியவர்கள் கல்வியும் உண்மையில் பிற்கால வாழ்வுக்குரிய கடமைகள் ஆகும். வாழ்க்கைக் காப்பீட்டுப் பொருளும்,