உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

41

பாதுகாப்புச் சேமப் பொருளும் இதே வகைப்பட்டவை. இவற்றுக்கெல்லாம் மீத்து வைப்பது செல்வந்திரட்டுவதற்கல்ல; இவை நல்லின்ப வாழ்க்கைத் திட்டத்தின் உத்திகளேயாகும். இவற்றின் நோக்கமும் வாழ்க்கை வளம் மட்டுமே.

வ் வெல்லை கடந்து மீத்துவைப்பது மேலும் நல்வாழ்வுக் குரிய வீடு, நல் உணவு, உடை முதலிய மேம்பாடுகளுக்கு உதவக்கூடும். ஆனால் வாழ்க்கைத் தேவைகளைக் கவனியாதும், தன் மேம்பாடு, குடும்ப மேம்பாடு ஆகியவற்றைக் கவனியாதும், பிறரைத் தொழில் ஏவும் எண்ணங்கொண்டும் சேமிப்பதென்பது உண்மையில் தன் வாழ்வை மேம்படுத்தும் செல்வம் ஆகாது; பிறர் வாழ்வைக் குறைக்க விரும்பும் செல்வமே ஆகும். மேற்குறிப்பிட்ட மீத்துவைப்புக் கடமைக்கு இது நேர்மாறுபட்டது.

தம் தேவை, தம் மேம்பாடு, குடும்ப மேம்பாடு ஆகிய வற்றுக்கு மேற்பட்டு, அவற்றுக்குத் தேவையற்ற அளவில் ஒருவனுக்கு வருவாய் மிகுமானால், அவன் அம் மிகை செல்வத்தைச் சேமித்து வைப்பதற்கான பயன்மிக்க சேமிப்பு முறை, படிப்படியாகத் தன்னைச் சார்ந்தோர்க்கும் தன் அண்டையிலுள்ளார்க்கும் இன்றியமையாத் தேவைகட்கோ, மேம்பாட்டுக்கோ உதவுவதேயாகும். தன்னை உயர்த்தும் செயலைவிடத் தன் சுற்றத்தையும் சூழலையும் உயர்த்துபவன் செயல், உலகியல் ஆதாய முறையில் பார்த்தால்கூட, அறிவுடைய செயலேயாகும்.சுற்றந்தழா அல், நட்பு, அறம் எனப் படிப்படியாக விரிந்து செல்லும் அன்பு உதவிச் செயல்கள் மற்றச் செலவுகளை விட ஒருவனுக்கு உயர்வும் செல்வாக்கும் தருவதுடன், அவன் வாழ்க்கை வளர்ச்சியிலும் தளர்ச்சியிலும் அவனுக்கு உறுதுணை யாக உதவவல்லவை. அத்துடன் அவை தரும் மன நிறைவும் அமைதியும் செல்வத்தைக் குவிப்பதாலோ, பகட்டாக வாழ்வதாலோ, பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதாலோ என்றும் பெறக் கூடாதவை.

மனிதன் பெறும் செல்வங்களில் மிக உயர்ந்த செல்வம் மனிதனே. மனிதர் மதிப்பும் அன்பும் நல்லெண்ணமும் உண்மையில் ஏழையைச் செல்வரினும் வலிமையுடையவராகவும் ஆட்சியாளரினும் செல்வாக்குடையவராகவும் ஆக்கத்தக்கவை என்பது உறுதி.