உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

அப்பாத்துரையம் - 45

நூற்சிறப்பு

'முதலீடு' சமதர்மவாதிகளின் திருநூல்.

ஆனால் அது ஒரு கட்சிக் கோட்பாட்டு

விளக்கமோ, காவியமோ அல்ல. அறிவு நூல் முறைப்படி யமைந்த யமைந்த ஒரு பொருளியல் ஆராய்ச்சி விளக்கம்.

,

அறிஞர் கார்ல் மார்க்ஸ் (1818-1883) ஜெர்மனியிலுள்ள ஒரு யூத வழக்கறிஞரின் புதல்வர். பான். பெர்லின் பல்கலைக் கழகங்களில் அவர் பயின்றவர். 1849இல் தீவிரக் கருத்துகளின் பயனாக அவர் நாடு கடத்தப்பட்டு, அது முதல் வாழ்நாள் முழுவதும் இலண்டனிலேயே கழித்தார். 1864 ஆம்

ஆ ண்டில் அவர் உலகத் தொழிலாளர்

சங்கத்தின் தலைவரானார்.

ஆசிரியர்

‘முதலீடு’ முதல் ஏடு காலத்திலேயே 1867இல் வெளியிடப்பட்டது மார்க்ஸின் குறிப்புகளிலிருந்து அவர் நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் 1883-85இல் இரண்டாம் ஏட்டையும் 1890-94இல் மூன்றாம் ஏட்டையும் வெளியிட்டார். இச்சிறு தமிழாக்கம் பெரும்பாலும் முதல் ஏட்டின் சுருக்க விளக்கம் ஆகும்.