உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதலீடு

சரக்குகளும் அவற்றின் மதிப்பும்

"மனிதரிடையே தகுதியும் மதிப்பும் உடையவர்கள் செல்வர்கள். அதுபோலப் பொருள்களிடையே தகுதியும் மதிப்பும் உடையவை முத்தும் வைரமும், பொன்னும் வெள்ளியும்! மனித னத்தில் செல்வர், சிப்பியில் முத்து! இரண்டும் சமம்!”

முதலாளித்துவ அறிஞரின் கோட்பாடு இது.

இது சரியா?

முத்துக்கும் வயிரத்துக்கும் மதிப்பு ஏற்பட்டது எதனால்?

பொருளியல் பகுப்பாராய்ச்சி அறிஞரிடம் முத்தையோ வயிரத்தையோ கொடுத்து ஆராயச்சொன்னால், முத்திலோ வயிரத்திலோ எத்தகைய தனிப் பொருட் கூறும் தனிப்பொருட் பண்பும் இருப்பதாக அவர்கள் கூறமாட்டார்கள். அவை, ஒரே பொருளின் இரு வேறு வடிவங்கள் என்றுதான் கூறுவார்கள். எனவே அவற்றின் மதிப்புப் பொருட் பண்பின் மதிப்பன்று: கலை மதிப்பும் பயன் மதிப்பும் மட்டுமேயாகும். இவையே அவற்றுக்கு விலைமதிப்பையும் தருகிறது.

விலைமதிப்பு என்பது என்ன? அதை அளப்பது எப்படி? அது எவ்வாறு ஏற்படுகிறது? அதற்கும் அதன் பயனுக்கும் என்ன தொடர்பு?

விலையும் விலைமதிப்பும் பண்டமாற்றில் அல்லது கொடுக்கல் வாங்கலில்தான் ஏற்படுகிறது. சரக்குகளின் விலை பொன் வெள்ளி நாணயங்களின் வடிவில் கிடைக்கிறது. இந்தப் பொன்னும் வெள்ளியும் எப்படி மதிப்புப் பெற்றன? அவற்றுக்கு ஈடாக எப்படித் தரப்பட்டன? பொன்னிலும் வெள்ளியிலும் அப்படி என்ன மாய மதிப்பு இருக்கக்கூடும்?