உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அப்பாத்துரையம் - 45

பொன்னுக்கும்

வெள்ளிக்கும் மாயப்

பண்புகள் இருப்பதாகத்தான் பாமர மக்கள் அடிக்கடி எண்ணுகிறார்கள். பழங்கால அறிஞர்கூட இப்படியே எண்ணியிருந்தார்கள். முதலாளித்துவ அறிஞர்கள் பொன்னுக்கு இத்தகைய மாயமதிப்பு இருப்பதாகக் கூறுவதில்லை. ஆனால் முதலீட்டுக்கு இதே மாயமதிப்பு இருப்பதாகவும் அவர்கள் எண்ணுகிறார்கள். அதற்கெனத் தனிமதிப்பு இருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இது சரியா என்று பார்ப்போம்.

பயன் மதிப்பும் விலை மதிப்பும்

நாணயம் உலகில் வழங்குவதற்கு முன் பண்டமாற்றுத்தான் நிலையிலிருந்தது.

பண்டமாற்றில் ஒரு சரக்குக்கு மற்றொரு சரக்கு மாற்றப்படுகிறது. ஒரு சரக்கின் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மற்றொரு சரக்கின் மற்றொரு குறிப்பிட்ட அளவு பரிமாறிக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இருபது முழம் துணி கொடுத்து ஒருவன் ஓர் உடுப்பு வாங்கலாம். அப்போது இருபது முழம் துணி = ஓர் உடுப்பு என்று கருதப்படும்.

இங்கே துணிக்கு உடுப்பு மாற்றுப் பொருளாக்கப் பட்டிருக்கிறது. அத்துடன் துணியின் 20 முழ அளவுக்கு உடுப்பின் எண்ணிக்கை அளவு ஒன்று சரி சமம் என்று கருதப்பட்டிருக்கிறது.

துணியும் உடுப்பும் ஒரே தரப்பட்ட பொருளல்ல; ஒரே பயனுடையவையும் அல்ல. ஆயினும் நான் அவற்றை மாற்றிக் கொள்ள முடிகிறது. ஆனால் மாறுபட்ட பயனுடையவை யாயினும் இரண்டும் பொதுவாகப் பயனுடையவை. இரண்டிலும் உள்ள பொதுப்பயன் காரணமாகவே அவை ஒன்றுக்கொன்று ஈடாகின்றன. இதுவே அதன் பயன்மதிப்பு ஆகும்.

எல்லாச் சரக்குகளுக்கும் பயன்தரும் ஒரு பண்பு அல்லது பண்புத் தொகுதி உண்டு. அதையே நாம் பயன்மதிப்பு என்கிறோம்.

எல்லாச் சரக்குகளுக்கும் அளவு என்ற மற்றொரு கூறும் உண்டு. இது ஒன்று, இரண்டு என்ற எண்ணலளவாயிருக்கலாம். அடி, முழம் என்ற நீட்டலளவாகவோ, சதுர அடி, மனை என்ற பரப்பளவாகவோ; கன அடி, கன முழம் என்ற கன அளவாகவோ