உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 46

தேவையை நிறைவு படுத்தவே இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்க இணக்கமளிக்கப் பட்டது. முதல் துணியாலை (பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் பருத்தியைச் சுத்திசெய்து கட்டமைக்கவே தொடங்கப்பட்டது) சென்ற நூற்றாண்டின் கடைப்பகுதியில் பம்பாயையடுத்த குர்லாவில் நிறுவப்பட்டது.

வாணிகச் சரக்குகளின் போக்குவரவை எண்ணியே, சிறப்பாகப் பிரிட்டனுக்கு ஏற்றுமதிக்கான சரக்குகளுக்காகவே, பிரிட்டன் புகை வண்டிப் பாதைகளை அமைத்தது.புகைவண்டி களுக்கு உடனடியான சிறு பழுதுகள் பார்க்கவேண்டிவந்தது. இதற்காகப் பழுதுபார்க்கும் பட்டறைகளும் தொழிற் சாலைகளும் அமைந்தன. வாணிகச் சரக்குகளை வைத்துக்கட்ட சணற்பைகள் செய்யும்படி வங்காளத்தில் சணலாலைகள் தொடங்கப்பெற்றன. இதுவும் ஏற்றுமதி நோக்கத்திற்காகவே.

ச்

வை யனைத்தும் சிறு திறத் தொழில்கள். மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வது, பிரிட்டிஷ் உற்பத்திச் சரக்குகளை இந்தியாவெங்கும் கொண்டு பரப்புவது ஆகிய ஏகாதிபத்தியப் பொருளியல் திட்டத்தின் முக்கிய கூறுகளுக்கு உதவியாகவே இச் சிறுதொழில்கள் வளர்க்கப்பட்டன. இவை பெரும்பாலும் இந்தியர் உடைமையிலேயே இருந்தன. இயந்திரங் களுக்குப் பழுதுபார்த்தலும் தனிப்பகுதிகள் பொருத்துக்கள் ஆகிய உலோகப் பொருள்களும் தேவைப்பட்டன. இவற்றை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்வது மிகவும் விலையருந்தலாயிருந்தது. இதனால் சிறு திற இரும்புத்தொழில் தோன்றியது. இங்ஙனமாக இந்தியத் தொழில் எக்காலத்திலும் பிரிட்டிஷார் ஊக்கம் பெற்று வளர்ந்ததல்லவென்று காணலாம். நேர்மாறாகப் பிரிட்டன் எப்போதும் இந்தியத் தொழில்வளர்ச்சி பற்றி அஞ்சிற்று. இந்திய விற்பனைக் களத்திலிருந்து இந்தியத் தொழில் பிரிட்டிஷ் தொழிலை விரட்டிவிடும் என்று அது எண்ணிற்று. இவ்வச்சம் தவறானதுமன்று. ஏனெனில் பிரிட்டிஷ் தொழில் இந்தியாவிலிருந்தே மூலப்பொருள்களைக் கப்பலிலேற்றிச் சென்று தொழிலாளர் மதிப்பு உயர்ந்துள்ள இங்கிலாந்தில் உற்பத்திசெய்து மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. ஆனால் இந்தியத் தொழிலுக்கு அருகிலேயே மூலப்பொருள்களிருக்கும் சாதக நிலை இருந்தது. அத்துடன் போக்குவரவுச் செலவும் குறைவு. தொழிலாளர்