உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

97

கூலிச்செலவும் குறைவு. ஆனால் ஏகாதிபத்தியம் இத் தொழில் வளராமல் தடுக்கக் கண்டிப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது. அதன்படி தொழிற்சாலை தொடங்குவதற்கு இணக்காழி சீட்டுப் பெறவேண்டும். உற்பத்தித் தொழில் தொடங்குபவர் இயந்திரம் வாங்கித் தொழிலாளரையும் தொழில் நுட்ப அறிஞரையும் அமர்த்திக்கொண்டு தொழிற்சாலை நடத்திவிட முடியாது. இத்தனைக்கும் முன்கூட்டி அரசியலாரிடம் இணக்கம் பெற வேண்டும். இவ்வாறு இந்தியாவில் எந்தெந்தத் தொழில் வளரலாம் என்பதையும் எந்த அளவிற்கு அவை வளரலாம் என்பதையும் முடிவுபடுத்தும் உரிமையைப் பிரிட்டன் தன் தனி உரிமையாக வைத்துக் கொண்டது. இந்தியத் தொழில் முதலாளிகள் இதை எதிர்த்தனர். அவர்கள் தம்மிச்சையாக வளரவும் விடப்படவில்லை. அதனுடன் அவர்களுக்குத் தடங்கல்களும் முட்டுக் கட்டைகளும் இடப்பட்டன. அவர்கள் தங்களிடம் உள்ளதை வைத்துக் கொண்டிருப்பதற்கே ஓயாது போரிடவேண்டியதாயிற்று. அதாவது அவர்கள் வகுப்புநலன்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராயிருந்தது.

வினா (64) : அவர்கள் (இந்தியத் தொழில் முதலாளிகள்) ஆதரவை நாடு எதிர்காலத்தில் நம்பலாமா?

விடை : இதற்கு விடைகூறுவது எளிதன்று. இன்னும் தங்கள் இயந்திரம், செலாவணி மாற்றுவசதிகள், காப்பு நிலையங்கள் (Insurance), பொருளகங்கள், போக்குவரவு ஆகியவற்றில் அவர்கள் பிரிட்டனின் உதவியையே எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்திய மன்னர்களைப் போல அவர்களும் வெளிநாட்டு உதவியையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியவர் ஆவர். இது அவர்கள் தன்னாண்மையைப் பெரிதளவு குறைத்துவிடும்.

வினா (65) : உங்கள் விளக்கத்தில் ‘இருந்தால்'களும் 'ஆனால்' களும் எங்கும் நிரம்பியுள்ளன. அவர்கள் உதவியை நாம் எதிர்பார்க்க முடியுமா? முடியாதா? இரண்டிலொன்று தெளிவாகக் கூறுங்கள்.

விடை : நான் கூறியதிலிருந்தே தெளிவாக உணர்ந்து கொண் டிருக்கலாம், எதிர்பார்க்க முடியாது என்பதை. ஏனெனில் இந்திய இன்ப வகுப்பு உண்மையில் உதவியற்ற நிலையிலேயே ருக்கிறது. இன்றைய முதல் முதல் தேவை நாட்டின்