உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

111

எதுவும் கிடையாது; புகைவண்டிகள் அவர்களை ஏற்றிச் செல்கின்றனவே, அது ஒன்றுதான் அவர்கள் வசதி! இரண்டாம் வகுப்பு வண்டியில் ஓரளவு வசதியுண்டு. ஆனால் அது மட்டாகவாவது செல்ல வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கிட்டுவது. முதல் வகுப்போ மிகப் பெரும்பான்மையாக ஐரோப்பியர்களாலும் பணக்கார இந்தியர்களாலுமே - சிறப்பாக ஐரோப்பியர் களாலேயே பயன்படுத்தப்படுகிறது. இவ் இந்தியர்களும் பெரும்பாலும் அரசியற் பணியாளர்களே. இவர்கள் செலவு செய்யும் பணமும் அரசியற் பணமே. நல்ல உணவும் உடல் நலப் பாதுகாப்பும் ஐரோப்பிய மரபிலேயே தரப்படுகின்றன. ஐரோப்பியர்களுக்குக் காட்டப்படும் ஒருதலைச் சார்பு எவ்வளவு வெட்ட வெளிச்சமானதெனில், ஒரு சமயம் ஐரோப்பிய ஊழியன் செய்யும் அதே வேலையிலீடுபட்ட இந்திய ஊழியனுக்கு ஐரோப்பிய ஊழியனின் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கே கொடுக்கப்பட்டது. இதுவும் ஐரோப்பியர்களுக்கான சிறப்பு வசதிகள், உரிமைகள் நீங்கலாக!

இந்திய அதிகாரிகளுக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் உள்ள சம்பளத்திலும் பெருத்த வேறுபாடு இருக்கத்தான் செய்தது. ஆனால் அனைத்தும் இது ஒரு பெரும் செய்தியன்று. ஐரோப்பிய முதலீட்டுப் பங்காளர்களுக்கு ஊதியப் பங்காகக் கிடைத்த தொகைக்கும் இந்திய ஊழியர்களுக்கு ஊதியமாகக் கிடைத்த தொகைக்கும் உள்ள வேறுபாடு கற்பனைக்கும் எட்டாதது. இந்தியர்கள் பயணம் செய்ததும் உழைத்ததும் பொருள்களை அனுப்பிக் கொடுத்ததும் எல்லாம் பிரிட்டிஷ் முதலீட்டுப் பங்காளிகளின் நலத்திற்காகவே. புகைவண்டித்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தங்கள் எத்தனையோ ஏற்பட்டுள்ளன. பயணம் செய்பவர்களுக்கு வசதிகள் இல்லை யென்பதுபற்றிச் சட்ட சபைகளிலும் பத்திரிகைகளிலும் எவ்வளவோ இடை விடாத கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இவை எதுவும் பயனளிக்க வில்லை. இன்று புகைவண்டிப் பாதைகளில் பெரும் பாலானவை அரசியலுக் குரியவையாய் விட்டனவாயினும்கூட, பிரிட்டிஷ் ாழியர்களில் பெரும் பகுதியினர் விலகிவிட்டபின்பும்கூட, இன்றும் புகைவண்டித் துறை அதன் பழைய போக்கில்தான் சென்று கொண் டிருக்கிறது. ஆகவே எந்த வகையாகப் பார்த்தாலும் இந்தியப் புகை வண்டித் துறையின் அமைப்பு

ப்