உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




||_ _ _

112-

அப்பாத்துரையம் - 46

சீருடையதாயில்லை; அது அடிப்படையிலேயே சீர்திருத்தப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.

இ ன் று புகைவண்டித்துறை அமைப்பை எவ்வாறு சீர்திருத்துவது என்பது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு இச்சீர்கேடுகள் யாவும் எப்படி ஏற்பட்டன என்று ன காண்பதும் முக்கியமானதேயாகும். முதலாவதாக, புகைவண்டிப் பாதைகள் பிரிட்டிஷ் வாணிகத்துக்காகவும், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியப் பாதுகாப்புக்காகவும், பிரிட்டிஷ் பங்காளிகள் ஆதாயத்துக்காகவுமே நடத்தப்பட்டன. ஆகவேதான் பயணம் செய் வோரின் வசதிகளுக்கோ இந்திய வாணிகத்தின் நலனுக்கோ இரண்டாந்தர மதிப்புத் தரப்பட்டது. இரண்டாவதாக, புகைவண்டிப் பாதைகளின் மொத்த நீளத்தில் எவ்வகை வளர்ச்சியும் ஏற்பட்டதில்லை. புகைவண்டித் துறைக்குரிய வாணிகக் கழகங்களும் சரி, அவற்றின்பின் உரிமை பெற்ற அரசியல்களும் சரி, அதன் பயனை இந்தியாவின் எல்லாப் பகுதியினருக்கும் பரப்புவதில் மிகக் குறைவான அக்கறை யுடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அவர்கள் முக்கியமான அக்கறை இப்போதிருக்கும் மொத்த நீளத்தை வைத்துக் கொண்டே உச்ச அளவு ஆதாயம் பெருக்குவதே. மொத்தத்தில் அன்றும் இன்றும் புகைவண்டித் துறை ஆதாயம் தரத்தக்க ஒரு வாணிக முயற்சியாகக் கருதப்படுகிறதே தவிர நாட்டுக்கோ நாட்டுமக்களுக்கோ முழுநிறைவாழ்வளிக்கும் ஒரு சாதனமாகக் கருதப்படவேயில்லை.

வினா (69) புகைவண்டித்துறையின் பிரச்சினைகளைச் சமதர்மம் எவ்வாறு தீர்த்து நடாத்தும்?

விடை : முதலாவதாகச் சமதர்ம அரசியல் புகைவண்டிப் பாதை யமைப்புக்களனைத்தையும் போக்குவரவுத் துறைகளில் ஒன்றாகவே கருதும். அது முக்கியமான துறையானாலும் அத்தகைய துறைகளில் ஒன்று மட்டுமே. அதனோடிணைந்த மற்றத் துறைகள் பிற நிலப்பாதைகள், வான்வழிகள், நீர்த்துறைப் போக்குவழிகள் ஆகியவை. இவற்றினிடையே ஒருமுக இணைப்பு ஏற்படுத்தி அவற்றினுள்ளாகப் போட்டியில்லாமல் செய்வதே முதல் வேலை யாகும். இரண்டாவதாக நம் புகைவண்டிப் பாதைகளின் மொத்த நீள அளவு மிகுதியாக்கப்பட்டு நம்