உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

113

நகரங்களனைத்துக்கும் மட்டுமின்றி ஊர்ப்புறங்களுக்கும் கூடிய மட்டும் அவை பயன்படும்படி செய்யப்படும். இது மிகவும் முக்கியமானது; ஏனெனில் நாட்டில் தொழில்துறை வளப்பம் இதனையே பொறுத்தது. தொழில் வளர்ச்சிக்கு உதவும் முறையில் சரக்குகளின் கட்டணம் கூடியமட்டும் குறைந்த அளவெல்லைக்குக் குறைக்கப்படும். இங்ஙனம் செய்யாவிட்டால் அவை தொழிலுக்கு ஒரு சுமையாகி இறுதிக்கட்டத்தில் மிகுதி விலை உண்டுபண்ணிப் பொதுமக்களுக்கே நட்டம் விளைவிக்கும். மூன்றாவதாக, பயணம் செய்பவர்களை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது வகுப்புக்களாகப் பிரிக்கும் பிரிவினை முறை ஒழிக்கப்படும், குடும்பங்களுக்கும் சில கூட்டுக் குழுக்களுக்கும் தனி வசதி நீங்கலாக, எல்லாம் ஒரு வகுப்பாகவே இருக்கும். இவ்வகுப்புக்கள் ஒழிவதைப் பற்றி யாரும் வருந்த வேண்டுவதில்லை. ஏனெனில் இயங்கூர்தி (பஸ், மின் ஊர்தி (டிராம்) முதலிய பிற போக்குவரவு முறைகளில் இத்தகைய வகுப்பு வேறுபாடு எதுவும் இல்லை. தவிர எல்லோருக்குமே உச்ச அளவு வசதிகளும் நலன்களும் செய்யப்படும். நான்காவதாக, புகைவண்டித் துறை அரசாங்கத் துக்குரியதாகவும், அரசியல் சமதர்ம மயமாகவும் இருக்குமாதலால் ஊழியர்களுக்குப் போதிய சம்பளமும் மற்ற நலன்களும் வசதிகளும் ஏற்படும். ஐந்தாவதாக, புகைவண்டி யூழியர்களின் தொழிற்சங்கங்கள் (சிறப்பு வகைப் புகைவண்டிக் குழுவின் மூலம் பேராண்மை பெற்று அரசியல் போக்குவரவுத் துறையில் ஒரு உறுப்பாக) அரசியலுடன் நெருங்கிய தொடர்பும் ஒத்துழைப்பும் உடையதாய் முன்னேற்ற வளர்ச்சிகளுக்கு உரிய தொண்டாற்றும். இவையனைத்திலும் ஆதாய நோக்கம் என்பதற்கே இடமிராது. பெரிய ஆதாயப் பங்கு கோரும் முதலீட்டுப் பங்காளிகள் யாரும் இருக்கமாட்டார்கள். செல்வ வளமிக்க ற்றாக அதனைப் பயன்படுத்தும் குழுநலன்கள் எதுவும் இருக்கமாட்டா. அக் குழுநலன்களின் சார்பில் தகுதிக்கு மேற்பட்ட கொழுத்த சம்பளம் வாங்கும் அவர்கள் கையாட்களும் இருக்கமாட்டார்கள். சமதர்ம அரசியலில் புகைவண்டித்துறை பொதுத் தொண்டாற்றும் ஓர் ஊழியக் குழுவாகி அதற்கு உண்மையில் உடைமையாளராகிய பொது மக்களுக்கே தொண்டாற்றும்.