உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(124) || — . ||---

அப்பாத்துரையம் - 46

பள்ளிகளைப் பற்றியமட்டில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளி இருக்கும்படி செய்யமுடியும் என்று முதலாளிகள் கூட ஒத்துக்கொள்கின்றனர். இது உடனடியாகச் செய்யவேண்டியது. இது முடியாத இடங்களில் ஐந்து கிராமங்களுக்கு ஒரு தொடக்கநிலைப் பள்ளியாவது முதற்படியாக ஏற்படுத்தலாம். கல்வியறிவு பெற்ற நாட்டு மக்களே திறமான தொழிலாளராகவும் திறம்பட்ட உற்பத்தியாண்மை யுடையவர்களாகவும் இருப்பர். இது தவிரப் பத்தாண்டுக் கால அளவிற்கு முதியோர் கல்வித் திட்டத்திற்கான ஏற்பாடுகளும் செய்யவேண்டும். இதன் மூலம் சிறுவர்,சிறுமியர் அனைவரும் கல்வி பெறும் அதே காலத்திற் குள்ளாக, முதியவர்களின் கல்வியறி வில்லாமையும் அகற்றப்படும். இவர்கள் தம் வறுமை காரணமாக இளமையில் கல்விபெற முடியாது போனவர்கள் ஆவர். இங்ஙனம் 10 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் கல்வியறிவு பெற்ற தேசம் ஆய்விடும்.

கடைசியாகக் கவனிக்கவேண்டியது பொழுதுபோக்கு. பார்வைக்கு இது ஏதோ தேவையற்ற அல்லது தேவைக்கு மேற்பட்ட ஒன்றாகத் தோன்றும். ஆனால் இது தவறு. மிகப் பழமையான காலத்திலிருந்தே கேளிக்கைகளின் பலன் உணரப்பட்டு வந்துள்ளது. நம் நாட்டில் மற்போர்ப் போட்டி முதலிய பல கேளிக்கைகள் ருந்தன. நம் புராண ஏடுகளில் அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் காணப் பெறுகின்றன. தேரோட்டப் பந்தயம் கௌதம புத்தர் காலத்தில் (அவர் ‘புத்தர்’ ஆகுமுன்) இருந்தது. கிரீசிலும் ரோமிலும் இருந்து வந்த கேளிக்கைகள் நன்கறியப் பட்டவை. கேளிக்கைகளில் மனிதன் எப்போதும் களித் தீடுபட்டுள்ளான்; ஏனெனில், அவற்றால் உடல் வலுவும் பொழுதுபோக்கும் கிடைக்கின்றன.

பாழுது

திரைக்காட்சி, நாடகமேடை, பேருரை மண்டபம் ஆகியவை வெட்டிவேலை யிடமோ வீண் பொ போக்கிடமோ அல்ல. அவை முழுவதும் இன்ப நாட்டம் கொண்ட இடமுமல்ல. நாடகம் எப்போதுமே ஒரு தேசத்தின் செயல்துறைப் பண்பாட்டின் சின்னமாகவே இயங்கி வந்துள்ளது. திரைக்காட்சி நாடகம் போன்றதுதான். அதன் வேறுபா டெல்லாம் அது நிழற்பட நுணுக்கத்துறையைப் பயன்படுத்துவதே.