உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

125

ஆக, அதுவும் பண்பாட்டின் ஒரு தோழனே. ஒரு ஊர்க் குழுவுக்கு ஒரு மேடை அமைந்து அதை மேற்பார்வை செய்ய ஒரு குடிமக்கள் பொழுதுபோக்குக் குழு ஏற்படுவது முடியக்கூடியதே. திரைப்பட, நாடகமேடை முதலாளிகள் நடப்பில் நுழைவுச் சீட்டுப் பெட்டியறையிலேயே நாட்டமாக இருந்து, ஆதாயத்துக் காகச் செய்யும் தொழிலை நாட்டு நலத்தை முன்னிட்டு இக்குழு மேற்கொண்டு நடத்தும்.

வாசிப்பகங்களும் நூல் நிலையங்களும் இதுபோலவே இன்றியமையாதவை.

இந்தியாவின் கிராமப் பிரச்சினைகளைக் கவனிக்கும்போது மருத்துவ உதவி ஏற்பாடுகளைப் புறக்கணித்தலாகாது. வ்வகையில் நாட்டுப்புறங்கள் முற்றிலும் கவனிக்கப்படாம லிருந்து வருகின்றன. கவனிக்கப்பட்டால் பல இறப்புக்கள் தவிர்க்கப்படக்கூடும்; பலரின் வாழ்நாள் நீட்டிக்கப்படலாகும். மருத்துவ உதவி என்பது நோயாளியை மருந்துப் புட்டியுடன் சென்று பார்க்க உதவும் ஒரு மருத்துவ நிபுணர் என்பது மட்டுமன்று. மருத்துவ விடுதிகளும் அறுவை மருத்துவக் கூடங்களும் தூக்கு கட்டில் உதவியாளரும் (ஆம்புலன்ஸ்) செவிலியரும் அமைதல் வேண்டும். நோய், கொள்ளைநோய் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தத்தக்க வாய்ப்புக்களுக்கு ஏற்பாடாக வேண்டும்.

மருத்துவப் பணி நோய்களைக் குணப்படுத்தும் நடைமுறை களுடன் நின்றுவிடக்கூடாது. முக்கியமாக நோய் தடுப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் பல உயிர்கள் கழிச்சல், அம்மை முதலிய பெருவாரி நோய்களால் மாள்கின்றன. முன்கூட்டித் தடை முறைகள் கையாளப்பட்டால் இது தவிர்க்கப்படக் கூடும். பிள்ளைப் பேற்றுப் பிரச்சினையும் இதுபோன்றதே. பேற்றுக்கு முன்னும் பின்னும் வேண்டிய பாதுகாப்புக்களுக்கு வகையில்லாமல் பெருந் தொகைத் தாய்மார்களும் குழந்தைகளும் மடிகின்றனர். அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் பேற்றுக்கு முன்னும் பின்னும் கவனிப்புப் பெறுவதுதான். இது மருத்துவ விடுதியிலேயே சிறப்பாகச் செய்யக்கூடியது. ஆயினும், கிராமக்குழு அடிப்படையில்தான் இத்தகைய மருத்துவ விடுதிகளும், செவிலியர் இல்லங்களும் அமைக்கப்படமுடியும்.