உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

அப்பாத்துரையம் - 46

இங்ஙனமாக, சமதர்ம அரசியல் கிராமங்களின் வாழ்க்கையை முன்னேற்றுவிக்கும் பொறுப்பைக் கடமையாக ஏற்கும். அது கிராமங்களிலுள்ள வாழ்க்கையை எளிதாக்கு வதுடன் இன்பமய மாக்கும். கிராமங்களில் பெரும்பாலோரான உழவர்கள் இதனால் நலம் பெறுவர்.

வினா (75) : நீங்கள் மேலே எடுத்துரைத்த சீர்திருத்தங்கள் எல்லாவற்றையும் பற்றி முதலாளிகளுந்தான் பிரசாரம் செய்கிறார்கள்? விடை : ஆம். பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், செயலில் காட்டுவது அருமையாய் விடுகிறது.

வினா (76) : அங்ஙனம் கூறுவதேன்?

விடை : நில உடைமைமுறை முற்றிலும் மாற்றப்பட்டாலல் லாமல் - பெருநிலக்கிழமை முறையின் ஒழிப்பு இதில் ஒரு பகுதி - ச் சீர்திருத்தங்கள் நடைபெறக் கூடியவையல்ல. எந்த முதலாளித்துவ அரசியலாவது பெருநிலக் கிழமை முறையை ஒழிக்கத் துணிவு கொள்ளுமா? அதிலும் முதலாளித்துவ இந்தியாவில் அதற்கு இடமேது? இந்நாட்டில் ஆட்சிக் குழுநலன்களின் ஆட்சி நீடிக்கும்வரை கிராமச் சீர்திருத்தம் என்பது என்றும் நடைபெறக் கூடியதன்று. நாட்டின் ஆட்சிக் குழு நலன்களை ஒழிக்கும் கண்டிப்பான திறமும் துணிவும் சமதர்ம அரசியலுக்கு மட்டுமே இருக்க முடியும்.

வினா (77) : ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளி என்று சொன்

னீர்கள். நாட்டுப்புற மக்களுக்கு மட்டுமன்றித்தேச மக்கள்

அனைவருக்கும் சமதர்ம அரசியல் கல்விப் பிரச்சினையின் சிக்கலை எவ்வாறு தீர்க்கும்? நமது தற்போதைய கல்விமுறை மிகச் சீர்கெட்ட தென்பது மிகத் தெளிவு. ஆனால், இதனிடமாகச் சமதர்ம அரசியல் என்ன அமைக்கும்? எங்களுக்கு இது பற்றிய நீண்ட அறிவாராய்ச்சியுரை வேண்டுவதில்லை, ஒரு கருத்து விளக்கம் போதும்.

விடை : கல்வி என்பது ஒரு தனித் தலைப்புக்குரிய செய்தி. அதுபற்றி விரிவாக விளக்க ஒரு முழுநூல் வேண்டும். சுருக்கமாக, கல்வியின் உண்மை நோக்கமாவது; முதலில் தொடக்கக் கல்வி அளிக்கப்பட வேண்டும்; இது பொது அறிவு தரும். அதாவது வாழ்க்கையை வாழ்ந்து நுகர்வதற்கான குறைந்த அளவு அறிவை இது தரும் (வாசிப்பதாலும் தானே ஆராய்ந் துணர்வதாலும்