உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

127

தனை மனிதன் பிற்படச் சற்றுப் பெருக்கி நிறைவு படுத்திக் கொள்ளலாம்).இரண்டாவதாக உயர்தரக் கல்வி வேண்டும்; இது மருத்துவம், பொறியமைப்பாண்மை (எஞ்சினீயரிங்), சிற்பம், பத்திரிகைத் தொழில் முதலிய சிறப்பறிவுத் துறைகளுக்கான பயிற்சி தரும். இவை இரண்டும் முக்கியமானவையே. ஆயினும் அவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொள்வோம்.

முதலாவதாக: நாம் கல்வி கற்பது எதற்காக? வாழ்க்கைச் சூழ் நிலையை எதிர்த்துச் சமாளித்துக்கொள்ள அது உதவுகிறது என்பதனாலேயே. இது தனி மனிதனுக்கு மட்டுமன்று, சமூகத்துக்கும் பொருந்தும். பிற்போக்கான, கல்வியறிவில்லாத சமூகம் முன்னேற்றமுள்ள, கல்வியறிவு பெற்ற சமூகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாது. முன்னது தொகையில் மிகுதியா யிருந்தால்கூட அது பலவீனமானதாகவே இருக்கும். தன் பொருளை எண்ணத்தெரிந்தவன் அதை எண்ணத் தெரியாத வனை விடச் செவ்வையான கருத்துடையவனாகவே இருப்பான். இது யாவரும் அறிந்ததே.

மெய்யாக, இன்றைய வாழ்வில் முற்காலத்தைவிட வாழ்வதற்கான பொது அறிவே நமக்கு மிகுதி வேண்டப்படுகிறது. இது ஒரு மனிதன் வளர்ந்தபின் தரப்படக் கூடியதன்று. இளமையாயிருக்கும் சமயத்திலிருந்தே அவன் வளர்ச்சியுடன் வளர்ச்சியாக அது அறிவிக்கப்பட வேண்டியதாகும். இக் காரியத்துக்குக் குழந்தைப் பருவமே மிகவும் தகுதி வாய்ந்தது. ஒரு கல்விமுறையின் முதல் கட்டுப்பாடு எழுத்தறிவு உண்டு பண்ணுவதாகும். அதாவது வாசிப்பு, எழுத்து, எண்ணுதல் ஆகிய திறங்களை முன்னேற்றுவது ஆகும். இது 8 அல்லது 9 வயதுக்கு முன் நடைபெறவேண்டும். இது முடிவுற்ற பின் இதே துறையில் உயர்தரப் பயிற்சி பெறுவர். அதாவது சிறிது சிக்கலான கணக்குகள், இன்னும் சிக்கல் வாய்ந்த சொற்றொடர்களைச் சேர்த்து விரிவான வாசிப்பு, எழுதுதல் ஆகியவற்றில் பழகுவர்.

கல்வியின் கொள்கைச் சார்பான பகுதி இது. மனம் கருத்துக்களைச் சில அளவையுட்பட்ட எழுத்துக்களாகவும் இலக்கங்களாகவும் மாற்றியமைக்க இப்பகுதி பயன்படுகிறது. இதுவே எழுத்தறிவு எனப்படும்.