உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

அப்பாத்துரையம் - 46

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற கருத்தைப் பிள்ளைகளின் மனத்தில் எழுப்புவதாகும்.

உலகெங்கும் கல்வி நிலையங்கள் பணியாற்றும் பணியின் பொதுத்தன்மை இது. இந்தியாவிலுள்ள கல்விநிலையங்கள் இதில் எவ்வளவோ தொலைவு குறைபடுகின்றன. நம் கல்வியமைப்புமுறை நம் அனைவரையுமே குமாஸ்தாக்களாக்கு வதற்கென அமைக்கப்பட்டது.ஆண்டுதோறும் நம் பட்டதாரிகள் ஆயிரப் பத்தாயிரக் கணக்கில் வெளியே அனுப்பப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எதற்கும் தகுதியுடையவர் களாயில்லை. சில வேளை வழக்கறிஞர், மருத்துவ நிபுணர்; ஒரு வேளை அமைப்பாளர், நுணுக்கத் துறையாளர் நிலைகளுக்கு அவர்கள் செல்லலாமாயினும், மிக மிகச் சிலரே இத்தகைய பயிற்சிகளுக்குச் செல்ல முடியும் - அவை அவ்வளவு செலவு பிடிக்கின்றன. தவிர இங்கும் அறிவுத்திறம் அவ்வளவு மட்டமாகவே உள்ளது.

சமதர்ம அரசியல் செய்யும் முதற்செயல் இந்தியாவின் கல்வித்துறை முழுவதையுமே முற்றிலும் மாற்றி யமைப்பது ஆகும். அது தனி மனிதன் வளர்ச்சிக்கு உதவி, அதன் மூலம் நாட்டு வளர்ச்சிக்கு உதவும் முறையில் அச் சீரமைப்பு திட்டமிட்டுத் தொடங்கப்பெறும். இவ்வளவு பட்டதாரிகள் நமக்குத் தேவையில்லை என்பதும் இன்னும் மிகுதியான வழக்கறிஞர்களை வைத்துச் செரிக்கவைக்க நம்மால் இயலாது என்பதும் எல்லாருக்கும் தெளிவாக விளங்கக்கூடும். இந்தியா தொழில் முறையில், பயிர்த்தொழில் துறையில், நுணுக்கத் துறையில் முன்னேற வேண்டி யிருக்கிறது. இத்துறைகளிலேயே கல்விக்கு உடனடியாக ஊக்கம் அளிக்கப்படும். மேன்மேலும் மிகுதியான அமைப்பாளர்கள், விமானிகள், மின்சார வல்லுநர்கள், பயிர்த்தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், புதுநிலக் கண்டுபிடிப்பாளர் (Explorers), ஆசிரியர்கள் ஏற்படவேண்டும். இவ் ஆண் பெண் ஊழியர்கள் நாட்டில் மிக மிக அவசரமாகத் தேவைப்படுகின்றனர். நம் கல்வித்துறை நிலையங்களின் இலக்கு இதுவாக, இதுமட்டுமே, ஆகவேண்டும். ஏனெனில், நம் நாட்டின் முன்னேற்றமும் வளமும் இத்தேவையை நிறைவேற்றுவதைப் பொறுத்தவை. பயிர்த் தொழில் கவனிப்பில்லாமல் சீர்கெட்டுக்