உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

129

கல்வியுடனும் முடிவுபெறுகிறது என்ப தில்லை. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அதை நாடிச் செலவிடலாம். பல விஞ்ஞானிகள், அமைப்பாளர்கள், மருத்துவர்கள் அங்ஙனம் செய்வதும் கண்கூடு.

கல்வியின் நூல்துறைப் பகுதி இவ்வளவினது. ஆனால் இன்று பள்ளிக் கூடம் என்பது முற்றிலும் தூய எளிய அறிவை மட்டும் திரட்டித்தந்தூட்டும் நிலையம் என்று கருதப்படுவ தில்லை. மாணவர்களை அறிவுடையவர்களாக மட்டுமின்றிச் சமூக முறையில் பயன்படுபவர் களாகவும் முன் மாதிரியான தகுதியுடையவர்களாகவும் செய்யும்படி புத்தாராய்ச்சிகளும் சோதனை முறைகளும் நடத்தப்படுகின்றன. முடிவாக உணரப்பட்ட முக்கியமான முடிவு யாதெனில், பள்ளி வாழ்வின் தொடக்கத்திலிருந்து குழந்தை வாழ்க்கையின் அறிவு (அதாவது முன்னோர் திரட்டிய அனுபவங்களின் தொகுப்பு) பற்றிய சில செய்திகளை மட்டுமன்றி, அவன் உடலும் உள்ளமும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதனால், இவ்வழியில் அவை வளர்ச்சி பெறுவதற்கான எல்லா உதவிகளும் செய்ய வேண்டும் என்பதே.பெரும்பாலான பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் விளையாட்டுகளும் களியாட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட் டிருப்பதன் நோக்கம் இதுதான். இத்துறையில் மாணவர் பங்குகொள்ளும் படி ஊக்கப்படுத்தப்படுகிறது. உடல் நலமும் அறிவுத் திறமையுமுடைய தலைமுறை சமூகத்தில் ஒரு மூலதனம் ஆகும். வெறும் அறிவு மட்டும் உடைய பலவீனமான தலைமுறை அதன்மேல் சுமத்தப்பட்ட கடன் பொறுப்பு ஆகும். கல்வி நிலையங்களின் சமூகச் சார்பான கடமைகள் பற்றிய மட்டில், இத்துறையின் பயிற்சியில் சோவியத் கூட்டுறவு ஒன்றிலன்றி வேறெங்கும் போதிய வற்புறுத்தல் செய்யப்படவில்லை. சோவியத் கூட்டுறவில் குழந்தைப் பருவம் முதலே சமூகம் பற்றிய கருத்துக்களும் கூட்டுறவு முயற்சி பற்றிய எண்ணங்களும் உள்ளத்தில் ஊன்றி வளர்க்கப்படுகின்றன. குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்களை ஒருங்கே விளையாடப் பழக்கம் தரப்படுகின்றது. பிள்ளைகள் வீடுகட்டி விளையாடு வதற்குப் பயன்படுத்தும் செங்கல்கள் குறைந்தது இருவரா லேயே தூக்கப்படும் அளவு பளுவுடையதாகச் செய்யப்படுகின்றன. வை எல்லாவற்றின் நோக்கம் கூட்டுறவின் மூலமே