150) ||-
||_ _.
அப்பாத்துரையம் - 46
தரப்பட்டுள்ளன. ஆனால் முடிவான நிலையில் ஆட்சி முதல்வரின் சட்டநிறுத்த உரிமை மூலம் அதிகாரம் அரசியலார் கையிலேயே இருக்கும்படி செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்பேர்களின் விருப்பங்களுக்கு நேரெதிராக எதையும் அவர்கள் மாற்றியமைக்க முடியும். இது மட்டுமன்று. அரசியலமைப்பின்மூலம் தரப்பட்டுள்ள உரிமைகள் யாவுமே ஒத்திப்போடலாகும். அப்படியானால் மொழியுரிமைக்கு என்னதான் பொருள்! ஆகவே குடியாட்சியின் மெய்யான உரைகள் தேர்தல்களும், மக்கட் சார்பான அமைச்சரவைகளும் அல்ல; குடிமக்களால் நுகரப்படும் அடிப்படை யுரிமைகளே.
அடிப்படையுரிமை
து
வடிவில் சமதர்ம அரசியல் உத்தரவாதமளிக்கும் முதல் உரிமை, சமூகத்தின் உறுப்பினராகப் பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழும் உரிமையாகும். இது பிரிட்டீஷ் அரசியலமைப்பில் கூட உத்தரவாத மளிக்கப்பட வில்லை. அங்கே குடியுரிமையாளன் மன்னனின் குடியாள் என்றே கருதப்படுகிறான். அவன் மீது அல்லது அவள் மீது வாழ்வு மாள்வுரிமை மன்னனுக்கு உண்டு.
இரண்டாவதாக, வாழும் உரிமையுடன் உடலுழைப்பு அல்லது அறிவுழைப்பு மூலம் வாழ்க்கை ஊதியம் பெறும் உரிமையில்லா விட்டால் வாழும் உரிமை என்பது பொருளற்ற ஒன்றாகும். பிழைப்புக்கான ஊதியம் ஈட்டும் உரிமை பெற ஒருவன் உழைத்தல் வேண்டும். ஈட்டாத வருவாய் மீது வாழும் வாழ்வுக்கு இதனால் இடமில்லை யென்றாகிறது. அதாவது முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான வழிமரபுரிமை, சுரண்டல் ஆகியவை இருக்க முடியாது.
மூன்றாவதாக: உடல் நலநிலையுடன் வாழும் உரிமையும் எல்லா வகை சமூக வசதிகளையும் நுகரும் உரிமையும் வேண்டும். குடியுரிமையாளன் உடல்நலம் இங்ஙனமாகத் தனிமனிதன் காரியமாயிராமல் அரசியல் காரியமாய்விடுகிறது.
நான்காவது: நோய், முதுமையடைந்தவர்கள் ஆகிய இரு ரு துறையாளர் நல உதவிகள் மட்டிலும் தொடர்ந்து நிலை பேறுடையவை யாயிருக்கும்.