உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

151

ஐந்தாவது: எல்லாவகைப்பட்ட கல்விகளும் இலவசமா யிருக்கும்; தனி மனிதன் முன்னேற்றம் தகுதியடிப்படையானதா யிருக்கும்.

ஆறாவது: சமூகத்தின் நன்னிலையுடன் முரண்படாதவரை, பண்பாட்டுச் சார்பிலும், உடல் சார்பிலும், அரசியல் சார்பிலும் குடியுரிமையாளனின் வளர்ச்சிக்கு முழு வாய்ப்பு இருக்கும்.

ஏழாவது: சமூகத்தின் உறுப்பினன் என்ற முறையில் குடியுரிமையாளன் எல்லா அரசியலின் உடைமைகளுக்கும் சமூகத்தின் உடைமைகளுக்கும் உரிய கூட்டுடைமையாள னாவான் (இது தனிப்பட்ட உபயோகத்திற்கோ அல்லது குடும்ப உபயோகத்திற்கோ உரிய உடைமையிலிருந்து மாறுபட்டது). அத்துடன் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பேராள் மூலம் அவ்வுடைமையின் நடைமுறை ஆட்சியில் அவன் தன் முழுப்பங் குரிமையும் உடையவனாவான். அப்பேராள் தகுதியற்றவ னானால் அவனைப் பின்வாங்கிக் கொள்ளும் உரிமையும் அவனுக்கு உண்டு.

கடைசியாக நிலத்தின் மீதும் கடலின் மீதும் வானத்தின் மீதும் உள்ள நாட்டின் எல்லாச் செல்வ உடைமைகளும் சமூக முறையிலேயே உடைமையாகிக் குடியுரிமையாளரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராட்கள் மூலமே நடைமுறையில் ஆட்சி செய்யப்படும்.

சமதர்ம அரசியலில் குடியாண்மைக்குரிய அடிப்படை உரிமைகள் இவை. அரசியல் இவ்வுரிமைகளின் பொறுப் பாளியாய் இருந்து அவை சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா என்று கவனிக்கும்.

இவ்வரசியலின் செயல்துறைகள் எவையாயிருக்கும், அவற்றின் கடமைகள் யாவை என்பன போன்ற செய்திகள் அவ்வவ்விடத்தின் நிலைமைக்கேற்ப முடிவு செய்யப்பட வேண்டியவை. இச்செயல் துறைகள் அரசியலின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும்; இவ்வரசியலும் மக்கள் பேராட்கள் அடங்கிய தனியுயர் சட்டமன்றத்தின் முடிவுகளை நிறை வேற்றும். சட்டமன்றங்களின் தேர்தல்களும் வசதிக்குத் தகுந்தவையா யிருக்கும். அவை நிலப்பரப்பு அடிப்படையிலோ மக்கள் தொகை