உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

171

பார்க்கலாம் எனத் தெரிந்தும் அதனை எறிந்து விடுவாயா? உன்னால் பயன்படுத்த முடியா விட்டாலும் கூட, அதனை வீணாக்காமல் யாருக்காவது பயன்படும் படி கொடுக்கவோ பாதுகாத்து வைக்கவோ செய்வாயல்லவா? நூல்களும் அப்படித்தான்!

நூல்களைப் படியாது காலத்தை அவ்வப்பொழு

தாக்குவது எங்ஙனம் தவறோ, அங்ஙனமே நிலையான பயனுடை நன்னூல்களையும், பயனுடன் இன்பமும் தரும் நிறை நூல்களையும் விடுத்துப் பொழுதுபோக்கு மட்டும் தரும் தற்காலிக ஏடுகளையோ, பயனில் இனபந் தந்து உள ஆற்றல் தளர்விக்கும் சிறு நூல்களையோ படித்தலும் தவறேயாகும். கற்றலின் பயன் அறிவூட்டி அறிவார்வத்தைத் தூண்டுவது மட்டுமன்று. இன்பூட்டிச் சிந்தனை யார்வத்தையும் புனைவாற்றலையும் பெருக்குவதும் அதன் குறிக்கோளாகும். இவை தவிர வேறு பல சிறு பயன்களும் உண்டு. ஆனால் நற் பண்பாளர் குறிக்கொண்டு கற்கும் பயன்கள் இவையே. ஒருநூல் இந் நோக்கங்களில்லாதது என்று காணப்பட்டால், அதனைப் படிப்பதினும் படியாதிருப்பதனாலேயே உனக்கு நலன் மிகுதியாகக் கூடும். ஏனெனில் அதனால் நேரமும் உழைப் பூக்கமும் உனக்கு மிச்சமாகும். பயனில் நூலில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால், பின் அது மாறி, நல்லார்வம் ஏற்படல் அரிது. தவிரப் பல நூல்கள் வாழ்க்கை பற்றிய தவறான கருத்துக்களை ஊட்டி, உன் வாழ்க்கைக்குக் கேடு பயக்கவும் கூடும்.

பெரியவனாவதென்பது எல்லோருக்குமே முடியாத காரியமாயிருக்கலாம். ஆனால் பெரியவர் சொல்லும் வழி செல்லுதல் எவருக்கும் முடியாததன்று. பெருநூல்களும் நல்ல நூல்களும் ஒருவரைப் பெரியவராக்கக் கட்டாயம் உதவும்; அதில் தடை ஏற்பட நேரினும், அவ்வழியில் அவை நம்மை இட்டுச் செல்லுதல் உறுதி. உண்மையில் பல பெரியார் தம்மையு மறியாமலே பெரியார்களான வகை வகை இதுதான். பெரிய நூல்களில் முழுக்க ஈடுபட முடியாமல் அதன் நயத்தில் சிறிது துய்ப்பவரும், அவரைச் சார்ந்தவரும், ஊர்க்காவலர், குற்ற மன்றத்தார் பக்கம் கருத்துச் செலுத்தவோ, ஐம்பெரும்பழிகள் புரிவார் கூட்டுறவை அணுகவோ என்றும் இடம்பெறார்