அப்பாத்துரையம் - 46
(172) ||__ என்பதை எவரும் குறிப்பிட வேண்டியதில்லை. நல்லேடுகள் செல்லும் வழியே நல் வீடும் நல் நாடும் செல்லும். புல்லேடுகளோ குற்றச் சிறைக்கூடுகள், காடுகள். அவை பொல்லாங்கு மேடுகளுக்கு இழுத்துச் செல்லும்.
மேற்கூறிய அறிவுரையை
ய
மேலீடாகக் கேட்டுப்
புனைகதைகள், மயிர்க்கூச்சிடும் அரு நிகழ்ச்சிக் கட்டுரைகள், கற்பனைக் கவிதை ஆகியவற்றைப் படிக்க வேண்டா; வரலாறும் வேதாந்தமும் மட்டுமே படி என்று நான் கூறுவதாக எண்ணி விடாதே. உண்மையில் ஆங்கில அரசனான எட்டாம் ஹென்றி ஏழு மனைவியரை மணந்தான்; மார்ல் பரோக் கோமகன் பிளென்ஹீம் வெற்றி பெற்றான்; கார்டிஃவ், கார்னார்லன் இரண்டும் வேல்ஸ்நாட்டின் தலை நகராகி இருந்ததாக உரிமைப் போட்டி இடுகின்றன என்ற இறந்தகாலச் செய்திகளினும், சிறப்பாகப் புனைகதைகள் நம் எதிர்கால வாழ்க்கைச் செய்திகள் பற்றி நல்ல தூண்டுதல் தருபவையே. வாழ்க்கைத் தொடர்பற்ற போலி வேதாந்தங்களினும், வாழ்க்கை நிலத்துக்கப்பால் முகில் கிழித்து மேலும், கடலாழம் அகழ்ந்து கீழும் செல்லும் புனைவிலக்கியங்கள் எத்துணையோ மடங்கு வளம் தருபவையே. ஆனால் செய்தியும் சரி, கற்பனையும் சரி, இரண்டின் பயனும், அவை உன் ஆர்வத்தை வாழ்க்கை நோக்கி, வாழ்க்கையின் முன்னேற்றம் நோக்கி, அதற்கான நற்றகுதி நோக்கித் தூண்டும் அளவுக்குத்தான்! ஆகவே எதை வாசிப்பினும் உன் அவாவைத் தூண்டும் ஆற்றல் நோக்கி, அவ்வவாவை வாழ்க்கை ஆர்வம் நோக்கிச் செலுத்துக. உன் வாழ்நாள் வீழ்நாள் படாது!
உன் உள்ளத்தின் எட்டு மெய்ப்பாடுகளையும் எழுப்பி, வியக்க வேண்டுவனவற்றை வியந்து, மகிழ வேண்டுவனவற்றில் மகிழ்ந்து, சினக்கவேண்டுமவற்றில் சினந்தும் வெறுக்க வேண்டுவனவற்றுள் வெறுத்தும், இழிக்க வேண்டுவனவற்றை இழித்தும் உன் உள்ளம் பெருகிடல் வேண்டும். அதன் பெருக்கம் உன் நோக்கத்தை உருவாக்கும். நோக்கம் செயலார்வமூட்டும். செயலார்வம் உன் தனி எல்லை கடந்தால், நீ உலக வாழ்வில் ஈடுபட்டுப் புது நாடு காண்டல், புதுத்துறை பழகல், புத்தறிவில் முனைதல் ஆகிய பொதுமக்கட்கான நிறைசெயலில் முனைவாய். உன் அவா பொதுப்பண்பு கடந்து கால வரம்பற்று வருங்கால