உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

173

உலகை அவாவினால், நீயும் ஒரு செயலார்வம் பொங்கும் கற்பனையாளனாய், நூல்களைப் படைக்கும் கலைஞனாவாய்.

நான் ஒரு நூலாசிரியனாக வேண்டும். நூலின் காதலனாக வேண்டும், நூலின் தோழனாக வேண்டும்” என்று நீ கண்ட கனவின் தன்மையை இப்போது உனக்கு விளக்கி விட்டேன்.ஆம், கனவுகாணும் நீ, அத்தனையையும் ஒருவேளை எண்ணிப் பார்த்திருக்கமாட்டாய். ஆனால் உன் மரபிலுள்ள முன்னோர்கள் உன் சமூகம், இறந்தகாலத்தில் கடந்த படிகளின் விளைவாகவே அவற்றின் சூழல் நிலைகளை நீ நன்கு பயன்படுத்திக்கொண்டதன் விளைவாகவே, இக் கனவுகள் உன்னிடம் தோன்றியுள்ளன. உன் உடலின் தன்மையை அறியாமலே நீ பிறந்தவனாயினும், அதனை அறிந்தால் நீ அதனைப் பின்னும் நன்கு பேணலாமல்லவா? அதுபோல, இக்கனவுகள் உன்னைமறியாமலே தோன்றி வளர்பவையாயினும், அவற்றின் தன்மைகளை அறிந்தால், அவற்றை நீ இன்னும் திறம்படச் செயல் நிறைவுறுத்தலாகும்.

மனிதன் முதலில் இயற்கையில் உயிரிலாப் பொருள்கள் சார்ந்து உயிரினங்களுள் ஓர் உயிரினமாய் வாழ்ந்தான். பின் அவன் படிப்படியாக உயிரிலாப் பொருள்களையும் உயிரினப் பொருள்களையும், இறுதியில் தன்னினத்தராகிய மனிதரையும் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான்.புராண கால மனிதன் நிலை இந்த அளவிலேயே நின்றது. ஆனால் இன்றோ அவன் மீட்டும் உயிரில்லாப் பொருள்களிடையே மறைந்து புதைந்துள்ள செல்வங்களையும் ஆற்றல்களையும் கண்டு, உயிரினங்களுக்கு மாற்றாகவும், ஓரளவு மனித உழைப்புக்கு மாற்றாகவும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளான். விலங்குகள் தூக்கிச் சென்ற பொருளைச் சக்கரங்கள் ஈர்த்தும் இயந்திரங்கள் உகைத்தும் செல்கின்றன. மாடுகள் இழுத்த செக்குகளையும் கவலை ஏற்றங்களையும் சக்கரங்களும் வார்களும் ஆணிகளும் கம்பிகளும் பெரிதும் இயக்குகின்றன. அணிமை வருங்காலத்தில் விலங்காற்றல் மட்டுமன்றி, மனித உழைப்பாற்றலும் முற்றிலும் விலக்கப்பட்டு விடக்கூடும். ஆனால் மனிதன் அறிவு வளர்ச்சியடையுந்தோறும் இந்த உயிரியல் ஆற்றல்களின் பயன்களும் குறைதல் உறுதி. கம்பி இல்லாத தந்தி போலவே சக்கரம் இல்லாத வண்டி, விறகில்லாத நெருப்பு ஒளி, மருந்தில்லா