உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

||---

அப்பாத்துரையம் - 46

உடல் நலம், பணச் செலவில்லாத வாழ்வு ஆகியவை நாள் முறை வாழ்வில் வந்துவிடலாம். ஏன் கூடாது?

ராபின்ஸன் குருஸோ புதுத் தீவுகளைக் கனவு கண்டான். ஜேம்ஸ் வாட் இயந்திரங்களைக் கனவு கண்டான். வில்லியம் வில்பர்ஃவோர்ஸ் அடிமை இல்லா வாழ்வை உள்ளத்தடத்தில் வரைந்தான். இவையெல்லாம் இன்று கனவார்வமில்லை. அது போல இன்று உன்போன்ற கனவறிஞர் காணும் கனவும், நெடுங்காலம் கனவார்வமாயிராது. உன்னைப் பின்பற்றி அதைக் கனவு காண்பவர் வரிசை ஏற்படும். ஒவ்வொரு கனவாளரும் கனவை ஒருபடி நனவுலகுக்குக் கொண்டுவருவர். கனவார்வம் நனவார்வமாய் நனவாய் விடும்.அதன்பின் உன்போன்றவர் புதிய கனவார்வத்தில் இறங்குவர். இங்ஙனம் கனவு காண்பவர் நனவுலகச் செயலாளர்கட்கும் பின்னோடிகளல்லர்; நனவார்வமுடைய அறிவியலாருக்கும் பின்னோடிகளல்லர்; அனைவருக்கும் முன்னோடிகளேயாவர். இக் கனவுலகுக்கு நீர் வார்த்து அதில் பழகிப் பழகி மக்கள் உள ஆர்வம் உவப்பும் புளிப்பும் பெற்று விடாமல் பார்க்கும் பொறுப்பு உன்துறை சார்ந்ததாகும் நூல் படைப்போர், நூல் நுகர்வோர், நூல் வாசிப்போர் துறையாகும்.

ஆகவே புதுமை நோக்கியும், புதுமையின் வேராகிய உண்மைப் பழமை நோக்கியும் கனவார்வத்தில் துணிந்து முனைக. துணிந்து பொதுமக்கள் அறிவு நிலத்தின் வான விளிம்பெல்லை கடந்தும், அவர்கள் பார்வையைத் தடை செய்யும் முகில்திரளைக் கிழித்து மேற்சென்றும், அவர்கள் எண்ண அலைப் பரப்புக் கடந்து ஆழ்ந்த கடலாழத்திலும், அப்பாலும் துருவியும் உன் எண்ணக் கலையம்பை விடுக்க. இன்று செங்கல்லால் கட்டடம் கட்டுவோர் கட்டுக, நீ செங்கல்லின்றிக் கட்டும் கலையில் முன்னேறி வருங்காலத்தில் செங்கல்லின் தேவையை இல்லாத தாக்குக. இன்று புறச் செயலில் விரைவோர் விரைக. நீ புறச் செயலின்றியே உலகை இயக்கும் அவ் இயக்க ஆழி உருட்டுக. கனவின் எல்லை விளிம்பில் நடமாடும் உன்னை உலகம் பின்பற்றல் உறுதி.

நூல் படைப்பவனைவிட நூல் நுகர்பவன் ஒரு படி தாழ்வு என்று எண்ணுவது கூடத் தவறு. அதுபோல நூலை நன்கு