வருங்காலத் தலைவர்கட்கு
ஆன
175
பயன்படுத்துபவர் அதனினும் தாழ்வு என்று தோற்றக் கூடும். னால் உண்மையில் உயர்வின் எல்லையிலுள்ள இம்முத்திறத் துறைகளுள் அவற்றைப் பயன்படுத்தும் திறம் தவிர வேறு உயர்வு தாழ்வு இருக்க முடியாது. நூலை வாசிப்பவன் தேர்ந்தெடுத்து வாசிப்பதன் மூலம் நல்ல நூல்களின் படைப்பை விரைவு படுத்துகிறான். அத்துடன் அவனே நேரடியாக நல்ல கருத்துக்களை உண்டுபண்ணி நூல்களை ஆக்கவும் கூடும். நூலை நுகர்பவனோ மக்கட் சமூகத்திலே அதன் அறிவைப் பரப்பி இன்னும் பெருக்கமாக அப்படைப்பை ஆற்றுவிக்கிறான். ஆகவே இம் முத்துறையிலுமே நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல், நல்லவை அல்லாதன அறிந்தொதுக்கல் ஆகிய இரண்டுமே அடிப்படையான நலங்கள் ஆகும்.
நல்லவற்றைத் தேர்ந்தெடுத்தல் என்பது தீயவற்றை ஒதுக்குதல் என்பதேயாகும். இது வெளிப்பார்வைக்குட் தோற்றுவதுபோல் அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் எல்லா ஏடுகளும் நல்லவை என்ற கருத்துடன் தான் எழுதப்படுகின்றன. அச்சிடப்படுகின்றன, வெளியீட்டகங்களில் விற்கப்படுகின்றன. அவற்றிடையே தேரும் தேர்வு பொதுத்தேர்வாயிருக்க முடியாது உன் தேர்வாய் இருக்க வேண்டும். அத்தேர்வாற்றல் உன் கனவையே, உன் குறிக்கோளையே, வாழ்க்கையில் நீ கண்ட அக்கரையையே பொறுத்தது. நூல் படைப்பவனைவிட, நுகர்பவனைவிடக்கூட, அதனைப் பயன்படுத்துபவன், தேர்பவன், தேர்வதற்கு வழிகாட்டுபவன் உயர் கனவாளனாக இருக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது.
சிறு பருவத்திலிருந்தே இத் தேர்வில் குழந்தைகள் பழக வேண்டுமென்பதற்காகவே சிறுவர் கலைக்களஞ்சியங்கள் அவர்கள் கையில் கொடுக்கப்படுகின்றன. நல்ல நூல் நிலையங்களில் அவர்கள் விடப்படுகின்றனர். முன்பே ஓரளவு தேர்ந்தெடுத்துப் பல்சுவைப் பட அமைந்த அவற்றில் தாம் விரும்பியவற்றைத் தேர்ந்தெடுப்பதால் அவர்கள் கனவு உருவாகும்; வளரும். இது நாட்டின் அடிப்படைச் சமூகப் பணியாகும்.
நல்ல நூல்களைத் தேர்வதில் நேரம் செல்கிறதே; படைப்போர் நல்லவை அல்லாத நூல்களை ஏன் படைக்கின்றனர்