176 ||__.
அப்பாத்துரையம் - 46
என்று நீ வினா எழுப்பக்கூடும்.ஆனால் நல்லது கெட்டது என்பது ஏற்றத்தாழ்வு, சூழ்நிலைகளைப் பொறுத்ததே. தேர்ந்தெடுத்ததன் பயனாகவே ஒன்று நல்லதாகும். ஒருவர் தேராததை மற்றொருவர் தேரக்கூடும். ஆனால் நல்லது கெட்டது என்பது பொருளின் தன்மை சார்ந்ததன்று; அதை நுகர்பவர் தன்மை சார்ந்தது. நுகர்பவருக்கு நுகரத்தக்கன எதுவும் இல்லை என்று காணப்பட்ட பின்னரே அது தீயது ஆகும். கனவு காண்பவர், தேர்ந்து பழகியவர், பயனற்றவற்றை மேற்கொள்ளவும் மாட்டார்; படைக்கவும் மாட்டார். ஆனால் கனவற்றவர் வாழ்க்கையின் அறிவு விளிம்பு தாண்டிப் பண்பைச் செலுத்தாதவர் பயனற்ற இன்பத்திலேயே நாட் போக்கிவிடுவர். இது எவருக்கும் கனவார்வத்தைக் குறைத்து உலக நாகரிகத்துக்கே சீரழிவு ஏற்படுத்தும்.
உலகில் அழிவுற்ற நாகரிகங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை வலிமை யில்லாததனால் மட்டுமே அழிந்தன என்று கூற முடியாது. உடல் வலிவு மிக்க உரோம நாடும் அழிந்தது. அறிவு வலிவும் கலை வலிவும் மிக்க கிரீஸ் நாடும் அழிந்தது. உலகுக்கே வழிகாட்டிய நடு உலகு (நடுக்கடல் சூழ்ந்த) நாகரிகங்களும் வீழ்ச்சியடைந்தன. இவ்வழிவுகளுக்குக் காரணம் யாது? அவை இற்றை மேலுலகம் போற்றும் பெருஞ்சிறப்பு வாய்ந்தவையாய் இருந்தன. ஆயினும் கனவார்வம் குன்றியதனாலேயே அவை அழிந்தன என்று கூறலாம்.
எனவே நல்ல புத்தகங்களைக் கண்டு தேர வழி யாதெனில் பயன்தரும் புத்தகங்களைப் பொறுக்கி எடு. அவற்றிலும் உனக்குப் பிடித்தவற்றையே வாசி என்பதேயாகும். உன் ஆர்வ அளவிலே உன் அறிவு உன் செயல் விரிவாக வளர்க. பயனிருக்கக் கூடுமென்று எண்ணும் நூல்களில் மிகுவிருப்பமில்லாவிட்டால் முதலில் விட்டு விட்டு மேலீடாக வாசி. உன் அறிவு பெருகப் பெருக ஆர்வம் பெருகக் கூடும். அல்லது அது நல்லார்வத்திற்கு வழி காட்டக் கூடும். ஆனால் விரும்பாத எதையும் ஊன்றி வாசித்து வெறுப்புடன் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு விடாதே; வெறுப்பிலிருந்து வளர்ச்சி ஏற்படாது வேண்டா வெறுப்ப அறிவை மரத்துப் போகச் செய்துவிடும்.
உன்