உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

179

போன்றவர்; அவர் முன்பு வருங்காலப் புகழின் அழைப்புப் புன்முறுவலுடன் நின்றிருந்தது. வீரமாகத் தொடங்கி எத்தனையோ வீரச் செயல்களை ஆற்றியிருக்க வேண்டிய, ஆற்றியிருக்கக் கூடிய அவ்வாழ்வு அவ் வீரர்களை யெல்லாம் திரட்டித் தொகுத்து ஒரு தூசாக்கி ஒரு சிறு காலவரையறைக் குள்ளாகவே என்றென்றும் எவராலும் மறக்க முடியாதபடி கால எல்லையின் உச்சத்தில் சென்று தன் பெயர் பொறித்து விட்டது!

மீகாமன் ஓட்ஸும் அவர் ஒப்பற்ற தோழர் ஐவரும்

உலகின் தென் துருவ மையத்தை நாடிச் சென்ற பயணத்தைப் பற்றியே நான் இங்கே குறிப்பிட்டேன் என்று உனக்குட் தெரியலாம். இதற்கு ஒரு திங்களுக்கு முன்வரை மனித உலகில் எவரும் அவ்வளவு தொலை தெற்கே சென்றதும் கிடையாது. அத் தென்கோடியை அணுகியதும் கிடையாது. அட் தென்துருவ மையத்தில் உலகின் முழுக் குளிர்கால மாகிய ஆறு மாதம் இரவாகவும், உலகின் முழுக் குளிர்காலமாகிய ஆறு மாதம் பகலாகவும் உள்ள அந்தப் பகுதியில் முதல் முதல் காலடி யெடுத்து வைத்து நின்ற பெருமையும் தன் புகழ்க் கொடியையும், நாட்டின் வெற்றிக் கொடியையும் அதில் வேறெந் நாட்டினர்க்கும் முந்தி நாட்டிய பெருமையும் இவ் வீரனுக்கும் அவன் தோழர் ஐவருக்குமே உரியது.

வ்

ஆனால் அவர்கள் புகழ்வெற்றியின் சிகரம் வெற்றியல்ல; அதன் தொடக்கமேயாகும். தாம் செய்து முடிக்க வேண்டித் தமக்கு உலகில் ஒப்புயர்வற்ற புகழ்தரப் போதிய இச் செயலைச் செய்த பின்னரே மனத்தை நடுங்க வைக்கும் அவர்கள் புகழ் வரலாறு தொடங்குகிறது. வெற்றி நோக்கி அவர்கள் ஆர்வத்துடன் சென்ற பயணத்தை விட, அவர்களுக்காக அவர்கள் கப்பல் காத்துக் கொண்டிருந்த இடத்துக்கு வெற்றிச் செய்தியுடன், வெற்றி எக்களிப்புடன் அவர்கள் மீண்டுவரும் பயணமே மிகமிகப் பொல்லாங்கான இடர்களை உடையதா யிருந்தது. உலகின் மிகு குளிர் மண்டலத்தின் கோடி மையத்தி லுள்ள அப்பகுதியில் அச்சமயம்தான் குளிர் ஊதைக் காற்றும் பனியும் பனிக்கட்டியும் சோனைமாரியாகப் பொழியத்தக்க சமயமாயிருந்தது. நெருப்பும் சுட அஞ்சத்தக்க அக்கடுங்குளிர்க் கோடையில் ஒரு காலை ஊன்றி ஒரு காலை எடுத்து வைக்கவும்