உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. சான்றாண்மை விரும்பும் இளைஞருக்கு

சீரியர் வாழ்க்கைப்பண்பில் சிந்தை செலுத்தும் செம்மலே!

பிள்ளைப் போதில் கதைகேட்பதில் நீ ஆர்வம் காட்டிய நாள்முதல் பீடுடைய பெருஞ் செயல் வீரர் கதைகளில் நீ ஈடு பட்டுள்ளாய். செயற்கரிய செயலில் துணிந்திறங்கி வெற்றி பெற்று வாழ்ந்தவர் கதையாயினும் சரி, செயற்கரிய செயல்களில் தம் உயிரைப் பிணையமாக வைக்க முனைந்து மாண்ட மரபுடையவர் கதையாயினும் சரி, உன் மனத்தை இரண்டும் ஒரே நிலையில் கவர்ந்துள்ளன என்பதை உனக்கு நினைப்பூட்ட வேண்டுவ தில்லை. வெற்றி யுடையதாயினும் சிறு செயலில் உன் நாட்டம் சன்ற தில்லை. உன் கனவார்வம் செயலின் அருமையும் வீறுடைமையும் பற்றியதே யன்றி வெற்றி குறித்தன்று. உன் வீரர்களின் வாழ்வின் உயர்வு சாவை விலை கொடுத்து வாங்கி அதன் மேலும் சாவாப் புகழ் நாட்டப் போதியதாயிருந்து வந்துள்ளது. ஆனால் அவ் வீரரோ தம் வாழ்வை எல்லையற்ற கவினுடைய இவ்வுலகின் நலத்தை யெண்ணி வீசியெறிந்து விடவும் ஒருங்கியிருந்தனர். உன் வீரர்களும் வீரர்களின் வீரரும் சென்ற வழி இதுவாயின், உன் வழி வேறு எதுவாக இருக்க முடியும்?

உன் இளமைப்போதின் தொடக்கத்திலேயே உன் நாட்டின் இளைஞர்கள் உள்ளத்தையும், எந் நாட்டி ன்

ஞர்கள் உள்ளத்தையும் என்றென்றைக்கும் ஈர்த்து அதில் ஒளி வீசவல்ல உயர் ஒளி விளக்கம் ஒன்றின் புகழ் உன்னை வந்து எட்டியிருக்கக் கூடும். நிலமீது நடந்த மாந்தர் யாவருள்ளும் நெஞ்சுரத்தில் விஞ்சிய அந்நீள் புகழாளனைப்பற்றிய உருக்க மிக்க வரலாற்றை நீ கட்டாயம் கேட்டு மனமுருகியிருக்க வேண்டும். ஏனெனில் அதனால் உள்ளமுருகாதவர் உலகில் எவரும் இலர். அவர் எழிலுடை இளைஞர், வாழ்க்கை மறுமலரின் அரும்பு